பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.com Ph: 04564-245400/265252
---------------------------------------------------------------------------------------
ஜம்மென்றிருக்க ஜெம்மாலஜி படியுங்கள்
ஜெம்மாலஜி என்பது நவரத்தினங்களை பற்றிய படிப்பாகும்.
விலை மதிப்பு உள்ள ஆபரணங்களை சோதித்து சொல்லும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த துறையில் பயிற்சியை முடித்தால் வேலை வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
இந்த பயிற்சியை நடத்தும் ஜெம்மாலஜிக்கள் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பையின் ஜாவேரி பஜாரின் பரபரப்பான முன்பாதேவி பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பயிற்சி நிலையம் 1971ல் ஆரமபிக்கப்பட்டது. இந்த மையத்தில் படித்தால் வெளிநாட்டில் நடத்தபெறும் FGA (London) தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வும் நீங்கள் எழுதலாம்.
கிரேட் பிரிட்டனின் ஜெம்மாலஜிக்கல் அசோசியேசன் நடத்தும் இந்த தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் தகுதி இங்கு படிப்பவர்களுக்கு கிடைக்கிறது.
இந்தியாவிலேயே ஆபரண கற்களை முறைப்படி சோதிக்கும் ஆய்வுக் கூடம் இங்குதான் இருக்கிறது. அதற்கான அதிநவீன சாதனங்களும் கருவிகளும் இங்கு உள்ளது.
உலக அளவில் கல் மற்றும் நகை தொழிலுக்கான பன்னாட்டு அமைப்பு இந்த சோதனைசாலைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய சிறப்பை பெற்ற பயிற்சி நிறுவனம் இது மட்டும் தான்.
ஜெம்மாலஜியில் பட்டைய படிப்பு
இதற்கு மூன்றரை மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஏப்ரல் ஆகஸ்ட் மாதங்களில் நடத்துகிறார்கள்.
இது தவிர ஒரு வருடப்படிப்பும் உண்டு.
இந்தியாவில் ஒரு வருடம் படிக்க ரூபாய் 6000 செலவாகும்.
செய்முறை பயிற்சி கட்டணம் ரூபாய் 8000 தனி.
ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுபோன்ற போட்டி குறைந்த தொழிலில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
தொழில் ரகசியம் வெளியில் போய்விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆனால் ஆர்வம் உள்ள எவரும் இந்த பயிற்சி மற்றும் படிப்பை முடித்து பொருள் ஈட்டலாம் என்பது தான் உண்மை.
இது பற்றிய அதிக தகவல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
The Secretary,
Gemology Institute of India,
Gurukul chamber,
187-189, Mumba Devi Road,
Mumbai - 400002.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment