]]

Sunday, September 9, 2007

சவுதியில் சுகாதார துறையில் வேலை

சவுதியில் சுகாதார துறையில் வேலை

சவுதி அரேபியாவில் சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவர் பிந்து மாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவக் கல்லூரி மற்றும் சுகாதார பயிலகங்களில் மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.

அதன்படி அவசர மருத்துவப் பிரிவில் மருத்துவ செயலர், சுகாதார நிர்வாகத்தில் மருத்துவ பதிவு தொழில்நுட்ப நிபுணர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுகின்றனர்.

மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர் அல்லது அதற்கு இணையான முதுகலை பட்டம் பெற்றவர் இதற்கு தகுதியான நபராக கருதப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராகவும், 50 வயதிற்கு குறைந்தவராகவும் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் சுய விவரப் பட்டியலுடன், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுத்து அதை,

"ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், டிஎன்ஹெச்பி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முதல் தளம், 48, முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-20'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும்.

0 comments: