]]

Sunday, September 9, 2007

பரங்கிப்பேட்டையில் ஆசிரியர் தின விழா

மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் அன்சாரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முகமது அல்பாசி வரவேற்றார். மூனா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் லியாகத்அலி, வேலாயுதம், ஜோதிமணி, கோதண்டராமன் ஆகியோர் பேசினர்.

விழாவில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ரிண்டோ டிப்சோ, வசந்தி, குபேரராஜா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் மூனா ஆஸ்திரேலியன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மூனா ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: