]]
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Sunday, September 9, 2007

சவுதியில் சுகாதார துறையில் வேலை

சவுதியில் சுகாதார துறையில் வேலை

சவுதி அரேபியாவில் சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவர் பிந்து மாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவக் கல்லூரி மற்றும் சுகாதார பயிலகங்களில் மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.

அதன்படி அவசர மருத்துவப் பிரிவில் மருத்துவ செயலர், சுகாதார நிர்வாகத்தில் மருத்துவ பதிவு தொழில்நுட்ப நிபுணர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுகின்றனர்.

மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர் அல்லது அதற்கு இணையான முதுகலை பட்டம் பெற்றவர் இதற்கு தகுதியான நபராக கருதப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராகவும், 50 வயதிற்கு குறைந்தவராகவும் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் சுய விவரப் பட்டியலுடன், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுத்து அதை,

"ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், டிஎன்ஹெச்பி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முதல் தளம், 48, முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-20'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும்.

Tuesday, August 28, 2007

தேசிய அலுமினியம் கம்பெனியில் ஐ.டி.ஐ., தகுதிக்கு வேலை

தேசிய அலுமினியம் கம்பெனியில் ஐ.டி.ஐ., தகுதிக்கு வேலை

மத்திய அரசு நிறுவனம் நால்கோ எனப்படும் தேசிய அலுமினியம் கம்பெனியில் காலியாகவுள்ள ஜூனியர் மற்றும் சீனியர் ஆபரேடிவ் டிரெய்னி பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஐ.டி.ஐ., தகுதி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் ஆபரேடிவ் டிரெய்னி

வயது தகுதி : ஆகஸ்ட் 1, 2007 அன்று 27 வயதுக்குட்டவராக இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மோட்டார் மெக்கானிக் : காலியிடங்கள் 6

+2 பாஸ் செய்திருப்பதோடு மோட்டார் மெக்கானிக் ஐ.டி.ஐ., தகுதி

மொபைல் எக்விப்மென்ட் மற்றும் ஹெவி எர்த் மூவிங் மெஷினரி : காலியிடங்கள் 9

+2 பாஸ் செய்திருப்பதோடு மோட்டார் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், டீசல் மெக்கானிக் இவற்றில் ஒன்றில் அப்ரென்டிஸ்ஷிப் மற்றும் கனரக வாகன லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

கிரைண்டர் : காலியிடம் 1

+2 பாஸ் செய்திருப்பதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

ஆட்டோ எலக்ட்ரிகல் : காலியிடம் 2

+2 முடித்திருப்பதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பிரிவு வாரியாக சீனியர் ஆபரேடிவ் டிரெய்னி

வயது தகுதி : பின்வரும் பணிகளுக்கு ஆகஸ்ட் 1, 2007 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை தரப்படும்.

எலக்ட்ரிகல் : காலியிடங்கள் 6

+2 பாஸ் செய்திருப்பதோடு எலக்ட்ரிகல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தகுதி.

மெக்கானிக்கல் : காலியிடங்கள் 8
+2 பாஸ் செய்திருப்பதோடு மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தகுதி.


ஆட்டோமொபைல் : காலியிடம் 1
+2 பாஸ் செய்திருப்பதோடு ஆட்டோமொபைல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தகுதி.

எலக்ட்ரானிக்ஸ் : காலியிடங்கள் 2
+2 பாஸ் செய்திருப்பதோடு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தகுதி.

விண்ணப்பிக்கும் முறை

படிவமும் முழு விபரங்களும் www.nalcoindia.com இன்டர்நெட் தளத்தில் உள்ளன. பார்த்து விண்ணப்பிக்கவும்.

ஜாதி, பிறந்த தேதி, தகுதிகள், திறன்கள், அனுபவம் போன்றவற்றுக்கான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

கட்டணமாக ரூ.50க்கான டிடியை நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடட், டாமன் ஜோடி என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி

THE MANAGER (HRD) – RECTT.

NATIONAL ALUMINIUM COMPANY LIMITED,

MINES & REFINERY COMPLEX,

DAMANJODI- 763 008.

KORAPUT,

ORISSA.


விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2007

Friday, August 24, 2007

ரெயில்வேயில் வேலை

ரெயில்வேயில் 53,500 பேருக்கு வேலை

மத்திய ரெயில்வே இணை மந்திரி வேலு பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-


ரெயில்வே துறையில் குரூப்-டி பிரிவில் 53 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

மத்திய ரெயில்வேயில் 6 ஆயிரத்து 413 பதவியும், கிழக்கு ரெயில்வேயில் 5 ஆயிரத்து 124 பதவியும், வடக்கு ரெயில்வேயில் 8 ஆயிரத்து 366 பதவியும், மேற்கு ரெயில்வேயில் 8 ஆயிரத்து 250 பதவியும் நிரப்பப்பட இருக்கின்றன.


மத்திய கிழக்கு ரெயில்வேயில் 7 ஆயிரத்து 643 பதவியும், கிழக்கு கடற்கரை ரெயில்வேயில் 5 ஆயிரத்து 200 பதவியும், வடமேற்கு ரெயில்வேயில் 4 ஆயிரத்து 787 பதவியும், மத்திய தென்கிழக்கு ரெயில்வேயில் 3 ஆயிரத்து 16 பதவியும், தென்மேற்கு ரெயில்வேயில் 4 ஆயிரத்து 701 பதவியும் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகள் விரைவில் நிரப்பப்படும்.


இதில் மத்திய தென் கிழக்கு ரெயில்வே 2 ஆயிரத்து 466 பேரையும், மேற்கு ரெயில்வே 8 ஆயிரத்து 109 பேரையும், மேற்கு ரெயில்வே 8 ஆயிரத்து 109 பேரையும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்து விட்டன.

வடக்கு ரெயில்வே தேர்வு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு விட்டது. விரைவில் அதற்கான தேர்வு நடக்கும்.


இவ்வாறு வேலு தெரிவித்தார்.