]]

Wednesday, September 12, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 20

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.com Ph: 04564-245400/265252
---------------------------------------------------------------------------------------
அச்சுத்துறையில் அழகான வேலைவாய்ப்பு

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மாற்றங்களுடன் வளர்ந்து வரும் துறையில் அச்சுப் பொறியியல் துறையும் ஒன்று.

பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து நிற்கும் மாணவர்களுக்கான சிறந்த மாற்று படிப்பு. இதில் சேர்ந்து பயிற்சி பெற்று அச்சுத்துறையில் பட்டம் பெறலாம்.

அச்சுத் தொழில் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே வருகிறது. புதுமைகளை புகுத்தும் ஆர்வம் இத்தொழிலில் அதிகமாகி வருகின்றது. இந்த தொழிலில் இன்னும் பல புதமைகளை கொண்டுவர முடியும்.

இதுவும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளில் ஒன்று. பல வெளிநாட்டு தொழில் நுட்பங்களை சிறந்த முறையில் உடனுக்குடன் அறிமுகப்படுத்தி இத்துறை சிறந்த தரத்துடன் வேகமாக முன்னேறி வருவதுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.

பயிற்சியும் இடமும்

இது மற்ற பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் படித்து வாங்கும் இளநிலை பட்டத்திற்கு சமமானது.

இந்த பயிற்சி நான்கு ஆண்டு காலத்திற்கானது.

ஓவ்வொரு ஆண்டும் செம்ப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி ஆரம்பமாகிறது.

கல்வித்தகுதி

இந்த படிப்பில் சேர்வதற்கு 12 அல்லது இன்டர்மீடியேட் முடித்து இருக்க வேண்டும்.

வேதியியல் இயற்பியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.

மதிப்பெண் விகிதம் 55 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு 35 என்பது இப்படிப்பிற்கான சாதகமான செய்தி.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் தேதி கணக்கின்படி விண்ணப்பதாரரின் வயதை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இடங்களின் எண்ணிக்கை

இந்த பயிற்சியில் ஆண்டு தோறும் 15 மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தேவையான சான்றிதழ்களின் நகல்கள் உள்ளடக்கிய உங்கள் விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை இரண்டு பாஸ்போர்ட் அளவு புடைப்படங்களுடன் இணைத்து நீங்களே விண்ணப்பிக்கலாம்.

உங்களின் விண்ணப்பம் ஜூன் மாதம் 4வது வாரத்திற்குள் கிடைக்கும்படி அனுப்பிவிட வேண்டும்.

இது பற்றிய மேலும் விபரங்களுக்கு :-

Thomson Training Centre In Printing Technology,
Thomson Press (India) Limited,
Mathura Road, Faridabad 121007, Hariyana.

S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: