Degree & Diploma Courses
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
டிடெர்ஜென்ட்ஸ் டெக்னாலஜி
சோப்பு தயாரிக்கும் முறையையே பாடமுறையாக வைத்துள்ளதை அறியும் போதே ஆச்சரியமாக இருக்கலாம்.
பெரிய சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கும் அல்லது சொந்தமாக சோப்பு தயாரித்து தொழில் செய்வதாக இருந்தாலும் இந்தப் படிப்பை படிக்கலாம்.
இந்த படிப்பை முடித்தால் B.Sc., (ஆயில் சோப்ஸ் அல்லது டிடர்ஜென்ட்ஸ்) என்று பட்டம் கொடுக்கிறார்கள்.
இநதப் படிப்பில் எண்ணெய், சோப்பு, டிடர்ஜென்ட், பன்மம் பரப்புப் பூச்சுகள் போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன.
கல்வித்தகுதி
இப்படிப்பிற்கு 12 மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இடம் கிடைக்கும்.
எழுத்து தேர்வுகளோ அல்லது நேர்முக தேர்வுகளோ கிடையாது.
பட்டப்படிப்பில் வேதியியலை முக்கிய பாடமாகவும் கணிதம் மற்றும் இயற்பியலை துணைப்பாடமாகவும் கற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 பர்ஸன்ட் விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பான பி.எஸ்.சி. ஆயில் சோப்பு அன்ட் டிடர்ஜென்ட்ஸ் என்ற படிப்பை முடிக்க மூன்று ஆண்டு காலம் ஆகும்.
இருந்தாலும் ஒரு வருட பட்டயப்படிப்புகளும் ஆறு மாத மற்றும் மூன்று மாத காலத்திற்கான சான்றிதழ் படிப்பகளும் பல்வேறு சிறு சிறு கல்வி நிறுவனங்களில் சிறு தொழில் கல்வியாக கற்றுத்தருகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தின் விலை சுமார் ரூபாய் 175
விண்ணப்பம் பெற கல்லூரி முதல்வருக்கு தக்க வங்கி வரைவோலை இணைக்க வேண்டும்.
விடுதி கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் போன்ற பிற விபரங்கள் பெற கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Chirda – 523157,
Prakasm District,
Andrapradesh.
0 comments:
Post a Comment