]]

Wednesday, September 12, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 22

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252
---------------------------------------------------------------------------------------

இனிதாக வாழ இன்சூரன்ஸ் துறை அழைக்கிறது

நம் நாட்டில் இந்த தொழிலுக்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் அதிக அளவு இருக்கும் என்று நம்பப்படுகின்றது. பல நிறுவனங்கள் இத்துறைக்கு புதிதாக வருவதால் அவர்களுக்கு அதிக அளவு மனித வள தேவைகள் இருக்கும்.

எனவே இது வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ள துறை.

காப்பீட்டு துறைகளில் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்று சுயவேலை வாய்ப்பு முறை.

மற்றொன்று தேவையான தகுதியை வளர்த்துக் கொண்டு வேலையில் சேர்வது.

வேறுபட்ட காப்பீட்டு படிப்புகள்

இத்துறை தொடர்பாக பல வேறுபட்ட படிப்புகள் உள்ளன.

10 அல்லது 12 படிப்பு முடிந்தவுடன் படிக்கக்கூடிய படிப்புகள் உள்ளன.

பட்டப்படிப்பிலேயே பல வகைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

பி.ஏ., பி.எஸ்.சி என்றும் படிக்கலாம்.

பட்ட மேற்படிப்பாகவும் படிக்கலாம்.

சான்றிதழ் படிப்பு

10, 12 முடித்தவர்கள் குறுகிய கால சான்றிதழ் படிப்பு படிக்கலாம்.

இதற்கு சமமான கல்வித் தகுதி உள்ளவர்களும் சேரலாம்.

இந்த பயிற்சியை நடத்தும் நிறுவனம்

மராத் வாடா பல்கலைக்கழகம்,
அவ்ரங்காபாத் - 431002

பட்டப்படிப்பு

காப்பீட்டு துறையில் பி.ஏ., பி.எஸ்.சி பட்டங்களை பெற படிக்கலாம்.

வங்கியியல் என்ற பாடத்துடன் சேர்த்தும் படிக்கலாம்.

இதற்கு 10 - 12 அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.

இதற்கான முகவரி

சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

Utkal University,
Povani Vihar,
Bhubaneshwar – 751004,
Orissa
.

S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...


வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: