]]

Friday, September 7, 2007

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். படிக்க ரூ. 25 ஆயிரம் நிதி உதவி

ஆதி திராவிட மாணவர்கள் ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். படிக்க ரூ. 25 ஆயிரம் நிதி உதவி

கருணாநிதி அறிவிப்பு

ஆதி திராவிட மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க ரூ. 25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் பயின்ற ஆதிதிராவிட மாணவர்கள் சட்டத் தொழில் தொடங்க, அதாவது கட்டிட வாடகை செலுத்தி, புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்கள் வாங்க ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்தினை 1996-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் கடந்த கால ஆட்சியாளர்களால் நிறுத்தப்பட்டது.

பின்னர் 5-வது முறையாக பதவி ஏற்ற முதல்-அமைச்சர் கருணாநிதியால் மீண்டும் சட்டம் பயின்ற பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்கிட மானியம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இவ்வாண்டு முதல் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி ஆகிய தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதும் ஆதி திராவிட மாணவ - மாணவியர் அத்தேர்வில் வெற்றி பெற ஏதுவாக அவர்கள் புத்தகங்கள் வாங்கிடவும் மற்றும் இதர செலவினங்களுக்காகவும் ரூ.25 ஆயிரம் வீதம் 100 மாணவர்களுக்கு வழங்கிட முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

முதல்-அமைச்சரின் இப்புதிய திட்டத்தின் மூலம் ஏழை ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் உயர் பதவிகளைப் பெற்றிட அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: