தொழிலாளர் நிர்வாகப் படிப்பு என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பை பெற்ற படிப்புகளில் ஒன்றாகும்.
வெளிநாடுகளில் உள்ள பெரிய கம்பெனிகளில் அனுபவத்துடன் கூடிய இப்பட்டதாரிகளுக்கு உடனடி வேலையும் உரிய ஊதியமும் எளிதில் கிடைக்கிறது.
தொழிலாளர் நிர்வாகம் குறித்த பட்டய பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை சென்னையில் உள்ள தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆஃப் லேபர் ஸ்டடிஸ் வழங்குகிறது.
இப்பிரிவு மூன்றிலும் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே பின்பற்றப்படுகின்றது.
Bachelor of Labour Management – BLM – 3 ஆண்டுப் படிப்பு.
50 சதவீத மதிப்பெண்ணுடன் 12 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Master of Labour Management – MLM – 3 ஆண்டுப் படிப்பு.
ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
PG Diploma in Labour Administration – ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட கல்வித் தகுதிக்கான இறுதித் தேர்வை எழுதியிருக்கும் மாணவர்களும் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புகள் குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்:
The Director,
Tamilnadu Institute of Labour Studies,
Chennai – 5.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment