அண்ணாமலை பல்கலையில் 21, 22 தேதிகளில் கருத்தரங்கு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய வேதி பொறியியல் துறை மாணவர்கள் கருத்தரங்கு 21ம் தேதி, 22ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.
அகில இந்திய வேதிப்பொறியியல் துறையின் மாணவர்களும், இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பும் அதன் மற்ற மண்டலங்களில் உள்ள நிறுவனங்களும் இணைந்து ஆண்டு தோறும் கருத்தரங்கை நடத்தி வருகின்றன.
மூன்றாம் ஆண்டிற்கான கருத்தரங்கு அண்ணாமலை பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறை சார்பில் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.
சாஸ்திரி ஹாலில் நாளை (21ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கட்ரங்கன் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
பதிவாளர் ரத்தினசபாபதி, பொறியில் துறை புல முதல்வர் பழனியப்பன் பேசுகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் அமைப்பு தலைவர் வெங்கட்ராமன், அண்ணாமலை பல்கலை கழகத்தின் வேதிப்பொறியில் துறை தலைவர் விருத்தகிரி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
0 comments:
Post a Comment