டிசம்பர் 5ல் நடக்கிறது அகராதியியல் மாநாடு
ஆசிய அகராதியியல் மாநாடு (ஏசியாலெக்ஸ் 2007) சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
சென்னைப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னைப் பல்கலைக் கழகம் 'ஏசியாலெக்ஸ்' எனப்படும் ஆசிய அகராதியியல் கழகத்துடன் இணைந்து 'ஏசியாலெக்ஸ் 2007' ஆசிய அகராதியியல் மாநாட்டை சென்னையில் நடத்துகிறது.
கடந்த காலமும், வருங்காலமும் என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு இதற்கு முன்பாக ஹாங்காங் (1997), குவாங்சவ் (1999), சியோல்(2001), டோக்கியோ(2003) மற்றும் சிங்கப்பூர்(2005) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக இம்மாநாடு சென்னையில் நடக்கிறது.
மாநாட்டிற்காக www.asialex2007.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகராதியியல் அறிஞர்கள் 200 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment