]]
Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts

Tuesday, April 21, 2015

சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு

18117_83
வரும் ஏப்ரல் 25  சனிக்கிழமை  காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை சிதம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு

இடம்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழி) நினைவரங்கம், ஈத்கா திடல், சிதம்பரம், கடலூர் மாவட்டம்

நாள்: 25.04.2015 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ்....

சமூக நல்லிணக்க அரங்கம் - நேரம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை

ஆய்வரங்கம் - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ஷரீஅத் அரங்கம் - நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை

சிறப்பு அமர்வுகள் - இடம்: M.Y.M. ஃபைஸல் மஹால், சிதம்பரம்

மகளிர் அரங்கம் (பெண்களுக்கு மட்டும்) - நாள்: 24.04.2015 வெள்ளிக்கிழமை - நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ஆலிம்கள் அரங்கம் (ஆலிம்களுக்கு மட்டும்) - நாள்: 25.04.2015 சனிக்கிழமை - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தமிழகத்தின் தலை சிறந்த மதிப்பிற்குரிய ஆலிம் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
11080418_8350
 
11082505_8350025
 
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
 
IMG-20150421-WA0005 
 
IMG-20150421-WA0006
 
IMG-20150421-WA0007
 
IMG-20150421-WA0004
 
புகைப்படங்கள் உதவி: லால்பேட்டை இணையதளங்கள் 

Tuesday, February 22, 2011

குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!
நீடுர் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா அ. இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!

  • குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் குழந்தைகள் பங்குபெற்ற மழலையர் நிகழ்ச்சிகள்!
  • 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் அவர்களின் வரலாற்றை மக்களின் உள்ளங்களில் பதிவு செய்வதற்காக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்" தொடர்ந்து மூன்று நாட்கள் நான்கு இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப், 'முஹம்து அப்துல் அஜீஸ் அல் உதைபீ' பள்ளிவாசலில் 6ம் ஆண்டு மாபெரும் ஸீறத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு... கீழ்க்கண்ட முறையில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

1. திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி
2. ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு
3. K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு

முதல் நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப் பிறகு மக்ரிப் வரை குவைத் நாடு தழுவிய அளவில் தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்றோருக்கு மாநாட்டின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது நிகழ்ச்சியாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 10:00 மணி வரை நடைபெற்ற ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையேற்க, சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர்கள் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் எம்.எஸ். அப்துல் குத்தூஸ் பி.ஏ., இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓத, மவ்லவீ அஷ்-ஷைஃக் ஏ. செய்யது அபூதாஹிர் பாகவீ, வரவேற்புரையாற்ற நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

இச்சிறப்புமிகு மாநாட்டில் தலைமையுரைக்கு பின் சங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து வருகை தந்த நீடுர், மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் முதல்வரும், நீடுர்-நெய்வாசல் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அல்லாஹ் அழைக்கும் அண்ணல் நபி (ஸல்)' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரையை நிகழ்த்தினார்கள்.

மவ்லானா அவர்கள் தனது உரையில், சிறப்புப் பெயர்களை கூறி நபி (ஸல்) அவர்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் அழைக்கும் முறைகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித் தோழர்கள் அழைத்த விதம், மற்ற மக்கள் அழைத்த முறை, நாம் அழைக்க வேண்டிய நடைமுறை போன்றவற்றை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் ஆதராங்களுடன் பட்டியலிட்டு மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.

இறுதி நிகழ்ச்சியாக K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட முதல் பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அல் ஈமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், சீமாட்டி சில்க்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் எம். பஷீர் அஹ்மத் அவர்களும், இரண்டாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், குவைத் வடக்குமாங்குடி ஜமாஅத்தின் தலைவரும், மஹாராஜா டெக்ஸ்டைல் சில்க் சென்டர் நிறுவனத்தின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ்.என். அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், மூன்றாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், சுமங்கலி மற்றும் சுப்ரீம் டெக்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ். அன்ஸாரி அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை தொழிலதிபர்களும், சமூகப் பணியாளர்களும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களால் சால்வை போர்த்தப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டது. குவைத்தில் இயங்கும் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அல் ஈமான் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைமை நிலையச் செயலாளர் எம். சுலைமான் பாட்சா, ஹழ்ரத் அவர்களுக்கு சால்வை போர்த்தி கவுரவப்படுத்தினார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள், சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் கொள்கைகள், சேவைகள், செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லிப்டன் நிறுவனம் மூலம் மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் குளிருக்கு இதமாக தேநீர் மற்றும் சூப் வகைகளும், மாநாட்டின் இறுதியில் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் இரவு உணவும், சிறப்பு மலரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இச்சிறப்புமிகு மாநாட்டில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலதிக விபரங்களுக்கு..
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்.

Tuesday, January 26, 2010

உலகத்தமிழ் இணைய மாநாடு! கம்ப்யூட்டர் தமிழ் வரைபட போட்டி!!

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

Thursday, September 20, 2007

அகராதியியல் மாநாடு

டிசம்பர் 5ல் நடக்கிறது அகராதியியல் மாநாடு

ஆசிய அகராதியியல் மாநாடு (ஏசியாலெக்ஸ் 2007) சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.

சென்னைப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னைப் பல்கலைக் கழகம் 'ஏசியாலெக்ஸ்' எனப்படும் ஆசிய அகராதியியல் கழகத்துடன் இணைந்து 'ஏசியாலெக்ஸ் 2007' ஆசிய அகராதியியல் மாநாட்டை சென்னையில் நடத்துகிறது.

கடந்த காலமும், வருங்காலமும் என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு இதற்கு முன்பாக ஹாங்காங் (1997), குவாங்சவ் (1999), சியோல்(2001), டோக்கியோ(2003) மற்றும் சிங்கப்பூர்(2005) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக இம்மாநாடு சென்னையில் நடக்கிறது.

மாநாட்டிற்காக www.asialex2007.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகராதியியல் அறிஞர்கள் 200 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.