]]
Showing posts with label சிதம்பரம். Show all posts
Showing posts with label சிதம்பரம். Show all posts

Tuesday, April 21, 2015

சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு

18117_83
வரும் ஏப்ரல் 25  சனிக்கிழமை  காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை சிதம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு

இடம்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழி) நினைவரங்கம், ஈத்கா திடல், சிதம்பரம், கடலூர் மாவட்டம்

நாள்: 25.04.2015 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ்....

சமூக நல்லிணக்க அரங்கம் - நேரம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை

ஆய்வரங்கம் - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ஷரீஅத் அரங்கம் - நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை

சிறப்பு அமர்வுகள் - இடம்: M.Y.M. ஃபைஸல் மஹால், சிதம்பரம்

மகளிர் அரங்கம் (பெண்களுக்கு மட்டும்) - நாள்: 24.04.2015 வெள்ளிக்கிழமை - நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ஆலிம்கள் அரங்கம் (ஆலிம்களுக்கு மட்டும்) - நாள்: 25.04.2015 சனிக்கிழமை - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தமிழகத்தின் தலை சிறந்த மதிப்பிற்குரிய ஆலிம் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
11080418_8350
 
11082505_8350025
 
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
 
IMG-20150421-WA0005 
 
IMG-20150421-WA0006
 
IMG-20150421-WA0007
 
IMG-20150421-WA0004
 
புகைப்படங்கள் உதவி: லால்பேட்டை இணையதளங்கள் 

Tuesday, January 26, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆரம்பம்

Friday, October 26, 2007

சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் பயிரிப்பட்டுள்ளது.

தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து நெல் வயல்கள் குளம் போல காட்சியளிக்கின்றன.

தில்லைநாயகபுரம், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, தில்லைவிடங்கன், கோவிலாம்பூண்டி, மீதிக்குடி, கிள்ளை, உத்தம சோழபுரம், ராதாவிலாகம், பின்னத்தூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

நடவு செய்த நாற்றங்கால்கள் முற்றிலும் அழுகின.

இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டுள்ளன.

நேற்று மழை குறைவாகவே இருந்தும் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியவில்லை.

பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

Tuesday, July 3, 2007

ராஜாமுத்தையா இருதய நிறுவனத்தின் "இருதயத்தை கவனி' சிறப்பு முகாம்

ராஜாமுத்தையா இருதய நிறுவனத்தின் சார்பில் 16ம் தேதி "இருதயத்தை கவனி' சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா இருதய நிறுவனத்தின் சார்பில் இருதயத்தைக் கவனி 2007 என்ற சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது என துணைவேந்தர் டாக்டர் வெங்கட் ரங்கன் கூறினார்.

இது குறித்து துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜா முத்தையா இருதய நிறுவனம் 2002ம் வருடம் இருதய நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் இருதய நோய் முகாம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதயத்தை கவனி 2007 சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கிறது.

முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிதம்பரம் செய்து வருகிறார். இருதய மருத்துவப் பரிசோதனை அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் உள்பட தமிழகத்தில் உள்ள 27 தொலைத்தூரக்கல்வி மையங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 25 ஆயிரம் பேர் பயனடைவார்கள். பரிசோதனை செய்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவப்பதிவின் படி முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த முகாம்களில் இரண்டு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. திட்டம் ஒன்றில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்புச் சத்து, புகை பழக்கம், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்தவர்களுக்கு ரூ.800க்கு பரிசோதனையும்,

திட்டம் 2ல் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்புச் சத்து, புகை பழக்கம், அதிக உடல் பருமன் அல்லாதவர்களுக்கும் இதுவரை மாரடைப்பு நோய் ஏற்படாதவர்களுக்கு ரூ.400க்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களை இருதய ரத்த குழாய் அடைப்பு நோய்களுக்கு மட்டுமே பதிவு மற்றும் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் கூறினார்.

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!