]]

Tuesday, July 3, 2007

ராஜாமுத்தையா இருதய நிறுவனத்தின் "இருதயத்தை கவனி' சிறப்பு முகாம்

ராஜாமுத்தையா இருதய நிறுவனத்தின் சார்பில் 16ம் தேதி "இருதயத்தை கவனி' சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா இருதய நிறுவனத்தின் சார்பில் இருதயத்தைக் கவனி 2007 என்ற சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது என துணைவேந்தர் டாக்டர் வெங்கட் ரங்கன் கூறினார்.

இது குறித்து துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜா முத்தையா இருதய நிறுவனம் 2002ம் வருடம் இருதய நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் இருதய நோய் முகாம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதயத்தை கவனி 2007 சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கிறது.

முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிதம்பரம் செய்து வருகிறார். இருதய மருத்துவப் பரிசோதனை அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் உள்பட தமிழகத்தில் உள்ள 27 தொலைத்தூரக்கல்வி மையங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 25 ஆயிரம் பேர் பயனடைவார்கள். பரிசோதனை செய்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவப்பதிவின் படி முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த முகாம்களில் இரண்டு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. திட்டம் ஒன்றில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்புச் சத்து, புகை பழக்கம், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்தவர்களுக்கு ரூ.800க்கு பரிசோதனையும்,

திட்டம் 2ல் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்புச் சத்து, புகை பழக்கம், அதிக உடல் பருமன் அல்லாதவர்களுக்கும் இதுவரை மாரடைப்பு நோய் ஏற்படாதவர்களுக்கு ரூ.400க்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களை இருதய ரத்த குழாய் அடைப்பு நோய்களுக்கு மட்டுமே பதிவு மற்றும் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் கூறினார்.

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!

0 comments: