]]

Tuesday, July 3, 2007

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்

9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்


மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர் கலந்தாய்வுக் கூட்டம், ஜுலை 9-ந் தேதியில் இருந்து ஜுலை 16-ந் தேதி வரை நடக்கிறது.


தமிழகத்தில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும் உரிய மாணவர் களை சேர்த்துக்கொள்வோம்.

மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.4 லட்சமாக தனியார் கல்லூரிகள் நிர்ணயித்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்ய அரசு அமைத்த ராமன் கமிஷனின் ஆயுள் இந்த மாதம் முடிகிறது. அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கும். அதைப் பார்த்துவிட்டு, கட்டணக் குறைப்பு அதிக அளவு பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அதனை பின்பற் றுவோம். கட்டணக் குறைப்பு அதிக அளவில் செய்யப்படவில்லை என்றால் மேல்முறையீடு செய்வோம்.


செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மற்றும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்களி டம் இருந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம். முதுகலை மருத்துவப் பிரிவுகளில் இன்னும் கூடுதல் பாடங்களை சேர்க்க இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள், கட்டாயம் அரசு மருத்துவமனைக ளில் 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

தமிழக சுகாதாரத் துறை செயலர் வி.கே.சுப்புராஜ், மருத்துவ கல்வி இயக்குனர் தியாகவல்லி கிருபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.


வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!

0 comments: