]]
Showing posts with label பாதிப்பு. Show all posts
Showing posts with label பாதிப்பு. Show all posts

Friday, October 26, 2007

சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் பயிரிப்பட்டுள்ளது.

தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து நெல் வயல்கள் குளம் போல காட்சியளிக்கின்றன.

தில்லைநாயகபுரம், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, தில்லைவிடங்கன், கோவிலாம்பூண்டி, மீதிக்குடி, கிள்ளை, உத்தம சோழபுரம், ராதாவிலாகம், பின்னத்தூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

நடவு செய்த நாற்றங்கால்கள் முற்றிலும் அழுகின.

இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டுள்ளன.

நேற்று மழை குறைவாகவே இருந்தும் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியவில்லை.

பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

Saturday, September 15, 2007

இட ஒதுக்கீட்டால் பாதிப்பா?

இட ஒதுக்கீட்டால் பாதிப்பா?

நீதிபதி விளக்கம்

'பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது' என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசியலமைப்பு சட்டத்தின் படி, சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

விதி 45/94ன்படி பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முஸ்லிம்களில் 90 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்களில் 80 சதவீதம் பேரும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜனத்தொகை அடிப்படையில்தான் தற்போது இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மீதமுள்ள 23 சதவீதம் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது.

ஆந்திராவில் முஸ்லிம் மைனாரிட்டி என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால்தான், ஐகோர்ட் அதனை தடை செய்தது. இடஒதுக்கீடு வழங்குவதில் பொருளாதார பின்னணியை கருத்தில் கொள்ள முடியாது.

இவ்வாறு நீதிபதி ஜனார்த்தனம் கூறினார்.