]]
Showing posts with label பல்கலை. Show all posts
Showing posts with label பல்கலை. Show all posts

Tuesday, January 26, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆரம்பம்

Saturday, September 15, 2007

சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழா

அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழா

மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி பங்கேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

150-வது ஆண்டு விழா

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பதிவாளர் ரெங்கநாதம் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

பல்கலைக்கழக சேப்பாக்கம், கிண்டி, தரமணி வளாகங்களில் தலா ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள். இந்த விழாவில் 42 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

பழைய மாணவர்களுக்கு விருது

100 குடிசை பகுதிகளையும் 50 கிராமங்களையும் தத்தெடுக்க சென்னை பல்கலைக்கழகம் முன்பு முடிவு செய்திருந்தது. அதன் தொடக்கவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறும்.

150-வது ஆண்டு விழாவை ஒட்டி சாதனைகள் படைத்த பழைய மாணவர்கள் 150 பேருக்கு விருது வழங்கப்படும்.

இந்த விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்க முடிவு செய்துள்ளோம்.

பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.

இவ்வாறு துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.

Friday, September 7, 2007

தொலைக்கல்வி தேர்வுகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பல்கலை., தொலைக்கல்வி தேர்வுகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைக்கல்வி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை பட்டம், திறந்தவெளி, சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு டிசம்பர் மாதம் செமஸ்டர் அல்லாத தேர்வுகள் நடக்க இருக்கின்றன.

இவற்றுக்கான விண்ணப்பங்களை பல்கலை.,யில் சமர்ப்பிக்க வேண்டிய தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தேதிகள் வருமாறு:

அபராதம் இல்லாமல் 24.9.2007,

ரூ.100 அபராத தொகையுடன் 10.10.2007,

ரூ.200 அபராத தொகையுடன் 18.10.2007

தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்கள், தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15க்கான ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையை இணைத்து, கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஏப். 2000-03 மற்றும் அதற்கு முன்னர் தொலைக்கல்வியில் பி.ஏ.,/பி.எஸ்சி., பகுதி 2 ஆங்கிலம், பி.ஏ., பகுதி 3ல் முக்கிய பாடங்களாக ஆங்கிலம், அரசியல் விஞ்ஞானம், சமூக அறிவியல், பி.காம்., ஆகிய பாடத் திட்டங்கள் டிச.2007 தேர்வுகளுடன் முடிகின்றன.

இந்த பாடத்திட்டங்களில் படித்தவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி டிச.2007 தேர்வுகளுக்கு தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இத்தகவலை கூடுதல் தேர்வாணையர் திருமலை தெரிவித்துள்ளார்.

Tuesday, August 28, 2007

ஆன்லைனில் பணம் செலுத்த வசதி

இக்னோ பல்கலை தேர்வுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வசதி
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை பருவத் தேர்வுக்கு புதிய விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை இக்னோவின் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் கடந்த பருவத் தேர்வு முடிவை, இக்னோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடாத தாள்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தாள் பாடக் குறியீட்டை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது.

ஆன்லைன் முறையில் தேர்வு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

செப்., 1ம் தேதி இது அமலுக்கு வருகிறது.

பல்கலை மதுரை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்துள்ளார்.