Thursday, June 3, 2010
Saturday, September 15, 2007
சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழா
அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழா
மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி பங்கேற்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
150-வது ஆண்டு விழா
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பதிவாளர் ரெங்கநாதம் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
பல்கலைக்கழக சேப்பாக்கம், கிண்டி, தரமணி வளாகங்களில் தலா ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள். இந்த விழாவில் 42 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.
பழைய மாணவர்களுக்கு விருது
100 குடிசை பகுதிகளையும் 50 கிராமங்களையும் தத்தெடுக்க சென்னை பல்கலைக்கழகம் முன்பு முடிவு செய்திருந்தது. அதன் தொடக்கவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறும்.
150-வது ஆண்டு விழாவை ஒட்டி சாதனைகள் படைத்த பழைய மாணவர்கள் 150 பேருக்கு விருது வழங்கப்படும்.
இந்த விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்க முடிவு செய்துள்ளோம்.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
இவ்வாறு துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: 150, சிண்டிகேட், சென்னை, நிறைவு விழா, பல்கலை
Tuesday, August 21, 2007
மெட்ராஸ் டே 2007 பொருட்காட்சி
சென்னை நகரத்தின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் "மெட்ராஸ் டே 2007'' பொருட்காட்சி நடக்கிறது.
"மெட்ராஸ் பட்டினம்'' 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உருவாகியது. இதையொட்டி "மெட்ராஸ்'' உருவான நாளை தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று முதல் நாளை (23ம் தேதி) வரை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் "மெட்ராஸ் டே 2007'' என்ற பெயரில் பொருட்காட்சி நடக்கிறது.
இப்பொருட்காட்சியில் சென்னை நகரத்தின் வளர்ச்சி குறித்த அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டள்ளன. மேலும், பழைய நகரத்தின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வரலாற்று சிறப்புகள் கொண்ட படங்கள், தபால் தலைகள், பழைய வரைப்படங்கள், அக்கால கட்டடங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இப்பொருட்காட்சியை நல்லி குப்புசாமி துவக்கி வைத்தார். இதில், ராவ், ராஜா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: 2007, சென்னை, பொருட்காட்சி, மெட்ராஸ்
Wednesday, July 18, 2007
தமிழகத்தில் முதல் முறையாக...
தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில், இதயத்தை 64 கூறுகளாக பிரித்து ஆராயும் திறன் கொண்ட அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த 64 சிலைஸ் சி.டி. ஸ்கேன் கருவி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கருவியில் சோதனை செய்ய நோயாளிகளிடம் 6 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை குறைக்க முயற்சி செய்வோம்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: அரசு ஆஸ்பத்திரி, இதய ஸ்கேன் கருவி, சென்னை


