]]
Showing posts with label விண்ணப்பம். Show all posts
Showing posts with label விண்ணப்பம். Show all posts

Tuesday, August 28, 2007

ஆன்லைனில் பணம் செலுத்த வசதி

இக்னோ பல்கலை தேர்வுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வசதி
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை பருவத் தேர்வுக்கு புதிய விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை இக்னோவின் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் கடந்த பருவத் தேர்வு முடிவை, இக்னோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடாத தாள்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தாள் பாடக் குறியீட்டை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது.

ஆன்லைன் முறையில் தேர்வு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

செப்., 1ம் தேதி இது அமலுக்கு வருகிறது.

பல்கலை மதுரை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்துள்ளார்.

Sunday, August 26, 2007

அரசு ஐ.டி.ஐ.யில் படிக்க விண்ணப்பம்

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு ஐ.டி.ஐ.யில் படிக்க விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சில தொழில் பிரிவுகளில் பயில, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ஆங்கிலம், தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு, தொழில் பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இயந்திர வரைவாளர், கம்மியர் (மின்னணுவியல்) ஆகிய தொழில் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் தொழில் பிரிவில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.


இந்த தொழில் பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31-8-2007 வரை நடைபெறும்.

ஆண்டுக் கட்டணம் ரூ. 1345. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50.

அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்

என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Friday, August 24, 2007

ஆசிரியர் கல்வி தேர்வு

ஆசிரியர் கல்வி தேர்வுக்கு விண்ணப்பம்

அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசிரியர் கல்வி பட்டய சான்றிதழ் தேர்வுக்கு, வரும் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான பாடங்களில் தேர்வெழுத தகுதி வாய்ந்த தனித் தேர்வர்கள், பள்ளிகளில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தொழிலாசிரியர்கள், அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வெற்று விண்ணப்பங்களை பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலேயே நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து தனித் தேர்வர்களும், முதலாம் ஆண்டிற்குரிய மூன்று பாடங்கள் மற்றும் இரண்டாம் ஆண்டிற்குரிய ஐந்து பாடங்களில், 2001 & 02ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும்.

Thursday, August 23, 2007

நர்சிங் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பம்

`டிப்ளமோ' முடித்தவர்கள் நர்சிங் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பம் இன்று முதல் பெறலாம்

நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்பில் சேர இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசம்.

சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tnhealth.org) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்தும் விணëணப்பமாக பயன்படுத்தலாம்.


அவ்வாறு விண்ணப்பிக்கும்போது `செக்ரட்டரி, செலக்ஷன் கமிட்டி, சென்னை-10' என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் டிமாண்ட் டிராப்ட் ஏதும் இணைக்கத் தேவையில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவ தேர்வுக்குழு செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.


மேற்கண்ட தகவலை மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் கே.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Sunday, July 15, 2007

பி.எஸ்சி., நர்சிங் - இன்று முதல் விண்ணப்பங்கள்

பி.எஸ்சி., நர்சிங்
இன்று முதல் விண்ணப்பங்கள்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2007-08ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று (16ம் தேதி) முதல் அனைத்து மருத்துவக் கல்லலூரிகளிலும் வழங்கப்படும்.

பொது விண்ணப்பம் 350 ரூபாய்க்கும், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் 100 ரூபாய்க்கும் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை பெற கடைசி நாள் 30ம் தேதி மாலை 3.00 மணி ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழுவிற்கு 30ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.