]]
Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Thursday, June 17, 2010

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் 5ஆம் ஆண்டு துவக்க விழா! புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் B.A அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் '5ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் S. முஹம்மது நூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் ஜனாப் J. ஹஸன் அலீ மற்றும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். பொருளாளர் ஹாஜி M.S குலாம் ஜெய்லானி மியான் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

4ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு

தலைவர் :ஹாஜி M.S. குலாம் ஜெய்லானி மியான்


கௌரவ தலைவர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

துணைத் தலைவர்கள் : 1. ஜனாப் S. முஹம்மது நூர் 2. ஜனாப் K. முஹம்மது இப்ராஹீம் (ஃபதஹ் நானா)

செயலாளர்: ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்


இணைச்செயலாளர் : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்

துணைச்செயலாளர்கள் : ஜனாப் U. நிஸார் அஹ்மது 2. ஜனாப் S. ஸலாஹுத்தீன்

பொருளாளர் : ஜனாப் S. கவுஸ் அலீ


துணைப் பொருளாளர் : ஜனாப் B.A. அப்துர் ரஜ்ஜாக்

ஊடகத்துறை பொறுப்பாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ


மக்கள் தொடர்பு : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்
ஆலோசனைக் குழு

தலைவர் : ஜனாப் J. ஹஸன் அலீ


உறுப்பினர்கள்: 1. ஜனாப் Z. ஹபீபுல்லாஹ் மரைக்காயர் 2. ஜனாப் B. முஹம்மது ஷரீஃப் 3. ஜனாப் A.B. அப்துல் நஜீர் 4. ஜனாப் M.H. அல்காஃப் ஹுஸைன் 5. ஜனாப் K. ஜாகிர் ஹுஸைன்

செயற்குழு


தலைவர் : ஜனாப் N. வஜ்ஹுத்தீன்
உறுப்பினர்கள் : 1. ஜனாப் S. இமாம் கஜ்ஜாலி 2. ஜனாப் M.H. உஜைர் 3. ஜனாப் I. முஸ்தஃபா 4. ஜனாப் S. ஷர்ஃபுத்தீன் 5. ஜனாப் S.A. பீர் முஹம்மது
புதிய பொருளாளர் ஜனாப் S. கவுஸ் அலீ நன்றியுரையாற்ற, கௌரவ தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குஉதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்புவதற்கும் kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பேரவையின் குழுமத்தில் இணைந்திடுமாறும் பேரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : ஊடகத் துறை, குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA), குவைத்


அலைபேசி எண்கள்:(+965) 66 36 26 47 / 97 87 24 82 / 66 64 14 34 / 67 78 97 84
மின்னஞ்சல்கள் : kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com
குழுமம் : http://groups.google.com/group/kpia
KPIA பேரவையின் செயற்திட்டங்கள்

அ) பரங்கிப்பேட்டைக்கான சேவைகள்:


1. கல்வி உதவி (உயர் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி)!


2. கத்னா (சுன்னத்) செய்ய உதவி!
3. ஜனாஸா அடக்கம் செய்ய உதவி!
4. ஆதவற்ற குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முறையில் தொழில் தொடங்க உதவி!
5. வருமானமில்லா பள்ளிவாசல்களில் ரமழான் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி!
6. ஜகாத் (ஏழைவரி), ஸதகத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் ஸதகா (தர்மம்) போன்றவற்றை இங்கு வசூலித்து ஊரிலுள்ள தகுதியுள்ளோருக்கு விநியோகித்தல்!
7. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயன்றவரை உதவி செய்தல்! 8. மற்ற வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் நமதூர் அமைப்புகளுடன் இணைந்து வேலையில்லாத நமதூர் சகோதரர்களுக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்தல்!
9. நமதூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்வி விழிப்புணர்வு முகாம், இலவச தண்ணீர் பந்தல், பேரூந்து & தொடர்வண்டி (இரயில்) கால அட்டவணை தகவல் பலகை, சாலையோரம் மரங்கள் நடுதல், கோடைகால பயிற்சி வகுப்பு, இலவச கம்ப்யூட்டர் கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நமதூருக்குத் தேவையான அவசியமான அத்தியாவசியமான பணிகள் குறித்த கலந்தாய்வு போன்றவற்றை ஏற்பாடு செய்தல்!
ஆ) குவைத்திற்கான சேவைகள்:

1. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது!


2. ஊரிலிருந்து வரும் தபால்களை ஒப்படைப்பதற்கான உள்ளூர் தபால் சேவை!
3. ஆண்டுக்கொருமுறை பேரவை சார்பாக குவைத்திலிருந்து புனித உம்ரா பயணம் புறப்படுதல்!
4. உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஏற்பாடு செய்தல்!
5. நமதூர் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல்!

இன்னும் உண்டு பல நல்ல செயற்திட்டங்கள்...!


இன்ஷா அல்லாஹ்... அவற்றை செயல்படுத்த வேண்டும்..!!
தங்களின் மேலான பிரார்த்தனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள்...!!!

Thursday, January 28, 2010

நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இவலச பயிற்சி

செய்தி: தினமலர் இணைய நாளிதழ்

Wednesday, September 26, 2007

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு கட்டணம் ரத்து

தமிழ் வழியில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கட்டணம் ரத்து

தமிழ் வழிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 10 மற்றும் 12ம் வகுப்பை தமிழ் வழியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுநாள் வரை, பள்ளி மூலமாக மேல்நிலைத் தேர்வு எழுதுபவர்கள் செய்முறை தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.225ம், செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.175ம் தேர்வுக் கட்டணமாக செலுத்தி வந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு கட்டணமாக ரூ.115 வசூலிக்கப்பட்டது.

வரும் 2008 மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகள் முதல் இந்த தேர்வுக் கட்டண விலக்கு நடைமுறைக்கு வருகிறது.

எனவே, பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ்வழியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

ஆனால், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் வழக்கம் போல தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Saturday, September 22, 2007

ஊரக திறனாய்வு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி நான்கு மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்விற்கான எழுத்துத் தேர்வு 4 மையங்களில் வரும் 23ம் தேதி நடக்கிறது.

இது பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீராசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்விற்கான எழுத்துத் தேர்வு வரும் 23ம் தேதி நான்கு மையங்களில் நடக்கிறது.

கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து திறனாய்வுதேர்விற்கு விண்ணப்பித்த மாணவ,மாணவிகள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,

சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வேண்டும்.

விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டத்தில் உள்ளவர்களுக்கு திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ளவர்கள் காட்டுமன்னார்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான நுழைவுச் சீட்டு நாளை (22ம் தேதி) முதல் அந்தந்த மையங்களில் நடக்கும் இலவச பயிற்சி வகுப்பில் வழங்கப்படும்.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வரும் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நுழைவுச் சீட்டு பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, September 20, 2007

மாநில ஜூனியர் கைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

மாநில ஜூனியர் கைப்பந்து அணிக்கு கடலூரில் 22ம் தேதி வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் கைப்பந்து போட்டிக்கான மாவட்ட வீரர்கள் தேர்வு கடலூரில் 22ம் தேதி நடக்கிறது.


34 வது மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் கைப்பந்து போட்டிகள் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.

இதற்காக கடலூர் மாவட்ட வீரர்கள் (ஆண்கள் மட்டும்) தேர்வு வரும் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் 1991ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

மேலும் தேர்விற்கு வரும் வீரர்கள் பிறந்த தேதிக்கான சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்று வர வேண்டும்.

இத்தகவலை மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 28, 2007

ஆன்லைனில் பணம் செலுத்த வசதி

இக்னோ பல்கலை தேர்வுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வசதி
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை பருவத் தேர்வுக்கு புதிய விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை இக்னோவின் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் கடந்த பருவத் தேர்வு முடிவை, இக்னோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடாத தாள்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தாள் பாடக் குறியீட்டை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது.

ஆன்லைன் முறையில் தேர்வு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

செப்., 1ம் தேதி இது அமலுக்கு வருகிறது.

பல்கலை மதுரை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்துள்ளார்.

Monday, July 16, 2007

ஹஜ் பயணம் : தமிழகத்திலிருந்து 3,384 பேர் தேர்வு

ஹஜ் பயணம்
தமிழகத்திலிருந்து 3,384 பேர் தேர்வு


தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மூன்றாயிரத்து 384 பயணிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆறாயிரத்து 766 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மூன்றாயிரத்து 384 இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. எனவே, இவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் கமிட்டி முடிவு செய்தது.

இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் சென்னை புதுக் கல்லூரியில் நடந்தது. இதில், 75 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர மீதம் மூன்றாயிரத்து 307 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நூறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கமிட்டியின் தலைவர் ஹாரூண் எம்.பி., கூறும்போது,

"தமிழகத்துக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு பெற மத்திய அரசிடம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் பயணம் செய்வது உறுதி செய்யப்படும்.

கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அவர்கள் அன்னிய செலாவணிக்கு முன்பணமாக செலுத்திய தொகை உடனே திருப்பித் தரப்படும்,''

என்று தெரிவித்தார்.

Sunday, June 17, 2007

விமானப்படைக்கு ஆள்தேர்வு

கோவையில் ஜுலை 14-ல் விமானப்படைக்கு ஆள் தேர்வு தமிழகம், புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


விமானப்படையில் சேருவதற்கான ஆள்தேர்வு வரும் ஜுலை 14-ந் தேதி கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
இது தொடர்பாக பத்திரிக்கை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவையில் வரும் 14-ந் தேதி விமானப்படையின் ``ஏர் வாரியர்'' பணிக்கான ஆள்தேர்வு நடக்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனத்தில் இன்டர்மீடியேட் அல்லது பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தேர்ச்சி அல்லது டிப்ளமோ (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்ட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 1986-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி மற்றும் 1990-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஆகியவற்றுக்கு இடையே பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், கோவை சூலூரில் உள்ள மெயின் கார்டு ரூமுக்கு ஜுலை 14-ந் தேதி காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் வரவேண்டும். வரும்போது, கல்விச்சான்றுகள் (என்.சி.சி. இருந்தால் கொண்டு வரவேண்டும்), அனைத்து கல்வி சான்றிதழ்களின் 3 நகல்கள், இருப்பிட சான்று (இருந்தால் மட்டும்), சமீபத்தில் எடுக்கப்பட்ட 7 பாஸ்போர்ட் கலர் புகைப்படங்கள் (தொப்பி அணியாமல்), 2 நீளமான உறைகள் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு தேவையான உடை மற்றும் உபகரணங்கள் (ஸ்போர்ட்ஸ் கிட்) ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
மேலும், விவரங்களுக்கு கமாண்டிங் ஆபீசர், 8, ஏர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ், தாம்பரம், சென்னை என்ற முகவரியை (தொலைபேசி-044-22395553 நீட்டிப்பு-3359) தொடர்பு கொள்ளலாம். கோவைக்கு வரும்போது விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.