]]
Showing posts with label ஹஜ் பயணம். Show all posts
Showing posts with label ஹஜ் பயணம். Show all posts

Sunday, August 26, 2007

தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேர் ஹஜ் செல்ல அனுமதி பெற வேண்டும்

தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேர் ஹஜ் செல்ல அனுமதி பெற வேண்டும்
இந்திய தேசிய லீக் கோரிக்கை

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம். பஷீர் அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்களில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஹஜ் பயணம் செல்ல சவுதி அரேபியா அனுமதி அளித்து வருகிறது.

அதன்படி இந்தியாவில் 14.70 கோடி முஸ்லிம்கள் இருப்பதால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு அனுமதி உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் 22 கோடி முஸ்லிம்களும் தமிழகத்தில் ஒரு கோடி முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.


எனவே தமிழக அரசு தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Monday, July 16, 2007

ஹஜ் பயணம் : தமிழகத்திலிருந்து 3,384 பேர் தேர்வு

ஹஜ் பயணம்
தமிழகத்திலிருந்து 3,384 பேர் தேர்வு


தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மூன்றாயிரத்து 384 பயணிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆறாயிரத்து 766 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மூன்றாயிரத்து 384 இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. எனவே, இவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் கமிட்டி முடிவு செய்தது.

இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் சென்னை புதுக் கல்லூரியில் நடந்தது. இதில், 75 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர மீதம் மூன்றாயிரத்து 307 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நூறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கமிட்டியின் தலைவர் ஹாரூண் எம்.பி., கூறும்போது,

"தமிழகத்துக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு பெற மத்திய அரசிடம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் பயணம் செய்வது உறுதி செய்யப்படும்.

கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அவர்கள் அன்னிய செலாவணிக்கு முன்பணமாக செலுத்திய தொகை உடனே திருப்பித் தரப்படும்,''

என்று தெரிவித்தார்.

Friday, July 13, 2007

ஹஜ் பயணம் செல்வது யார் : சென்னையில் இன்று குலுக்கல்

ஹஜ் பயணம் செல்வது யார்?
சென்னையில் இன்று குலுக்கல்

இந்த ஆண்டில் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆறாயிரத்து 800 பேரில் மூவாயிரத்து 484 பேர் சென்னையில் இன்று நடக்கும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் நேற்று தமிழக ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஹஜ் கமிட்டி தலைவர் ஜே.எம்.ஆருண் எம்.பி., உறுப்பினர்கள் பிரசிடென்சி ஓட்டல் அதிபர் அபுபக்கர், அப்துல் பாசித், ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்த பின்னர் ஜே.எம்.ஆரூண் கூறியதாவது:

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு செல்ல 6 ஆயிரத்து 800 பேரும், 16 குழந்தைகளும் விண்ணப்பித்துள்ளனர். முதலில் 2 ஆயிரத்து 700 பேருக்கு மட்டும் தான் அனுமதி கிடைத்தது.

ஹஜ் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதன் பின்னர் மூவாயிரத்து 384 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 100 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு மூவாயிரத்து 484 பேர் யாத்திரை செல்ல உள்ளனர்.

யாத்திரீகர்கள் யார்? யார்? என்பதை இன்று நடக்கும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசின் சார்பில் ஹஜ் கமிட்டியின் செயலர் அலாவுதீன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கமிஷனர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் ஒருவர் உடன் செல்லலாம். விமான டிக்கெட் கட்டணத்திற்கு மட்டும் சலுகை கிடைக்கும். 75 வயது கடந்தவர்கள் 77 ஹஜ் யாத்திரை செல்ல உள்ளனர்.

விண்ணப்பித்துள்ள அனைவரும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜே.எம்.ஆரூண் கூறினார்.


நன்றி : தினமலர்