கடலூர் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி நான்கு மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு
கடலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்விற்கான எழுத்துத் தேர்வு 4 மையங்களில் வரும் 23ம் தேதி நடக்கிறது.
இது பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீராசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்விற்கான எழுத்துத் தேர்வு வரும் 23ம் தேதி நான்கு மையங்களில் நடக்கிறது.
கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து திறனாய்வுதேர்விற்கு விண்ணப்பித்த மாணவ,மாணவிகள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும்,
சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வேண்டும்.
விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டத்தில் உள்ளவர்களுக்கு திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ளவர்கள் காட்டுமன்னார்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான நுழைவுச் சீட்டு நாளை (22ம் தேதி) முதல் அந்தந்த மையங்களில் நடக்கும் இலவச பயிற்சி வகுப்பில் வழங்கப்படும்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வரும் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நுழைவுச் சீட்டு பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 comments:
Post a Comment