பெண் கரு பாதுகாப்பு மாநில கருத்தரங்கம்
சென்னையில் 'பெண் கரு பாதுகாப்பு' குறித்த மாநில கருத்தரங்கம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
பெண் சிசு கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த ஆலேசானைக் கூட்டம் சமூல நல வாரிய அலுவலகத்தில் நடந்தது.
சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா தலைமை வகித்தார்.
சென்னை கலெக்டர் ஜெயா வரவேற்றார். 'காசா' அமைப்பின் ஆலோசகர் பவளம், கல்வித்துறை கூடுதல் இயக்குனர் சரோஜினி, பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண் சிசுக்கொலை கவலை அளிப்பதாகவும், இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களிடையே மீடியாக்கள் உதவியோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
வரும் 30ம் தேதி சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கரு பாதுகாப்பு' குறித்த மாநில கருத்தரங்கை சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் தன்னார்வ அமைப்புக்கள், சட்டத் துறையினர், மருத்துவ துறையினர், காவல் துறையினர், மாணவர்கள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment