மக்கள் தொகை கல்வி மையம் சென்னைப் பல்கலை.,யில் துவக்கம்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை கல்வி மையத்தை துணைவேந்தர் ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னைப்பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை கல்வி மையம் நேற்று துவக்கப்பட்டது.
இம்மையத்தில் மக்கள் தொகை மற்றும் மேம்பாடு குறித்த பயிற்சி முகாமும் நேற்று நடந்தது.
மக்கள் தொகை கல்வி மையத்தையும், பயிற்சி முகாமையும் சென்னைப்பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசியதாவது:
உலக மக்கள் தொகை 1850ம் ஆண்டில் 120 கோடியில் இருந்து, 2000ம் ஆண்டில் 609 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 908 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பல வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது. அதிக மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியால் இந்தியா மற்றும் சீனாவில் வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்துள்ளன.
சீனாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டில் 140 கோடியை எட்டும் என்றும், அதன்பிறகு குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் மக்கள் தொகை 2045ம் ஆண்டில் 160 கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் தொகையால் மனிதவளம் அதிகரிக்கும் நேரத்தில் ஏழ்மை, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்னைகளும் உள்ளன.
மக்கள் தொகை குறித்து பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.
0 comments:
Post a Comment