'இக்னோ'வில் புதிய சட்ட படிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலை (இக்னோ) சட்டம் பற்றிய படிப்புகளை தொலை தூரக் கல்வி முறையில் துவக்க உள்ளது.
2008 ஜனவரி முதல் 'சைபர் லா' என்ற படிப்பில் முதுகலை சான்றிதழ் படிப்பை (பி.ஜி., சர்டிபிகேட் இன் சைபர் லா) ஆன்லைன் மூலம் துவங்க உள்ளது.
இப்படிப்பு சட்டம் படித்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இது இந்தியாவில் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரிகள் மூலம் பயிற்றுவிக்கப்படும்.
மேலும் பி.ஜி., சர்டிபிகேட் இன் பேடன்ட் லா என்ற படிப்பும் விரைவில் துவக்கப்பட உள்ளது.
இப்படிப்புகளுக்கான விவரம் விரைவில் நாளிதழ்களில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள இக்னோ துணை மண்டல மையத்தை அணுகலாம். அல்லது 0452 238 0387 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
இத்தகவலை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment