]]

Saturday, September 22, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 27

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252

-------------------------------------------------------------------------------------------------



கூட்டுறவு பயிற்சி (Co-Operative Training)

கூட்டுறவு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பபை 2 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

இப்பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் கூட்டுறவு வங்கிகளிலும் கூட்டுறவு விநியோக சங்கங்களிலும் வேலை வாய்ப்பிற்கு சாத்தியம் உள்ளது.

அதிகமான கல்வி நிறுவனங்கள் இத்துறைக்கான பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக மாணவர்களை வெளியில் அனுப்பினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து வேலையில் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கல்வித்தகுதி

12 அல்லது சமமான படிப்பு 12ல் வணிகம் மற்றும் பொருளாதார பாடங்களை படித்தவர்கள் இத்துறையில் எளிதாக நுழையலாம்.

கற்றுத்தரும் குறிப்பிடத் தகுந்த இடங்கள்

நடேசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேடிவ் ட்ரெய்னிங்,
அண்ணா நகர், சென்னை - 40.

அறிஞர் அண்ணா மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
காஞ்சிபுரம்.

வேலூர் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
வேலூர்.

நாச்சியப்பா மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
சேலம்.

இராமலிங்கம் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
கோயம்புத்தூர்.

எம். குமாரசாமி மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
திருநெல்வேலி.

சங்கரலிங்கனார் மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
சாத்தூர்.

பாண்டிய நாடு மானேஜ்மென்ட் அண்ட் கோ ஆபரேட்டிவ் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்,
மதுரை.

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: