குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 23ம் தேதி குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் நடக்கிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் தொழிற்சாலை இணைப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2007ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில்(மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) 23ம் தேதி நடக்கிறது.
பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களை பணிக்கு தேர்வு செய்யவுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 2007ம் ஆண்டில் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., பட்டங்கள் பெற்ற மாணவர்கள் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.
இதன் அடிப்படையில் மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment