]]
Showing posts with label முகாம். Show all posts
Showing posts with label முகாம். Show all posts

Tuesday, September 21, 2010

K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்'

குவைத்தில் செயற்படும் இந்திய கல்வி நிலையங்கள் / பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு / வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(றை)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகம் ஆகியற்றின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

முதல் நாள் நிகழ்ச்சி:


16.09.2010 வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்களும் சிறப்புரையாற்றினர்.

சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் உட்பட ஏறக்குறைய 150 சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கல்வி குறித்து எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டன. கல்வி குறித்த தகவல்களும் பார்வையாளர்களால் பரிமாறி கொள்ளப்பட்டன. அனைவருக்கும் தேநீர் வசதியும், பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“Kuwait Tamil Islamic Committee (K-Tic)” Conducted 2 Day Programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil


Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait .

K-Tic arranged two outstanding programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil Language for Tamil Community

The first program was on September 16, 2010 Thursday @ 7:30pm after Ishaa Prayer at Fahaheel - Masjid Majeed Al Hilal Al Othaibee.

Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India and Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary) gave valuable lecture on education.

The program was presided over by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President) and The Dua made by Moulavee Qaari Ash-Shaikh H.M. Abdur Rahman Mazhahiri (Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

The second program was on September 17, 2010 Friday @ 7:30pm after Ishaa Prayer at Kuwait City - Masjid Al Shaaya, Near Mirqab KPTC Bus Terminal.

Prof. A. Abdur Raheem M.A., M.Ed., QTIC, (Senior Member, Education Wing, K-Tic / Advisor, Kuwait Universal American School, Hawally, Kuwait / Pilot Instructor, Kuwait Airways, Kuwait) and Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India) presented the highlights and importance of education.

The program was presided over by Moulavee Al-Hafiz Qari Al-Haaj Ash-Shaikh M. Muhammed Nizamudheen Baaqavee (Vice President, K-Tic) and The Dua made by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President).

Both the conference was anchored, convened, inaugurated & listed by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary), welcome address by Al-Haaj A.K.S. Abdul Nazar (Dy. Gen. Secretary) and vote of thanks by Al Haj H. Mohammed Nasar (Dy. Treasurer).

Before concluding the programs at 9.30pm., a questionnaire section was conducted. All speakers replied on questions and doubts on Education, Job and scholarship position / situation in Tamilnadu and India . The spectators requested K-Tic to carryout more such camps which will be very useful for the community.

Separate seating was arranged for ladies and tea was served at the both programs.

Further, information & forms were presented for the Free Al-Quran Classes arranged in co-ordination with Kuwait Ministry of Awqaf & Islamic Affairs.

For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group.

Tuesday, September 14, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு'

குவைத்தில் செயற்படும் இந்திய கல்விக்கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(i)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 16.09.2010 வியாழக்கிழமை மாலை 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் குழு செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.மஹ்பூப் பாஷா ரஷாதீ ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., தொகுத்து வழங்க இருக்கும் இச்சிறப்புமிகு முகாம்களில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு...

துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com

மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com

யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம். செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Saturday, September 22, 2007

வேலைவாய்ப்பு முகாம்

குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 23ம் தேதி குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் நடக்கிறது.


இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் தொழிற்சாலை இணைப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2007ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில்(மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) 23ம் தேதி நடக்கிறது.

பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களை பணிக்கு தேர்வு செய்யவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 2007ம் ஆண்டில் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., பட்டங்கள் பெற்ற மாணவர்கள் மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, எம்.ஐ.டி.,யில் 23ம் தேதி காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.

இதன் அடிப்படையில் மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 19, 2007

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் சார்பில் மதுரை லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் செப்.28ம் தேதி 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது. இதில் 2,500 பேர் உடனடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதுகுறித்து வாரிய இயக்குனர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

இந்நிறுவனம் பொறியியல் பட்டம், பொறியியல் டிப்ளமா மற்றும் பிளஸ் 2 (தொழிற்கல்வி) பயின்ற மாணவர்களுக்கு ஓராண்டு செயல்முறைப் பயிற்சியினை மாத உதவித் தொகையுடன் வழங்குகிறது.

மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினை அளிக்கிறது.

தென்மாவட்ட மாணவர்கள் நலன்கருதி வாரியம் சார்பில் மதுரை அழகர்கோயில் கிடாரிபட்டியில் உள்ள 'லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி'யில் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்கு 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது.

இதில் டி.வி.எஸ்., குரூப், சக்தி குரூப், ஸ்பிக் ஜெல் இன்டஸ்டிரியல் கன்ஸ்சல்டன்ட், நோகியா உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கின்றனர்.

இதில் 1500 பொறியியல் டிப்ளமா மற்றும் 1000 பிளஸ் 2 (தொழிற்கல்வி) மாணவ, மாணவர்கள் உடனடியாக தேர்வாகின்றனர்.

டிப்ளமா, பிளஸ் 2 படித்து மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே இச்சலுகையை அனுபவித்தவர் கலந்து கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி முதல்வர் சேதுபதி கூறியதாவது:

முகாமில் கலந்து கொள்வோர் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்குள் கல்லூரியில் இருக்க வேண்டும்.

கல்லூரி சார்பில் மேலூர், மத்திய, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பஸ் இயக்கப்படுகிறது.

அரசு டவுன் பஸ் வசதியும் (கட்டணம் உண்டு) செய்யப்பட்டுள்ளது.

அசல் கல்விச் சான்றுகள், சுய குறிப்பு மூன்று நகல்களுடன் மாணவர்கள் வர வேண்டும்.

செப்.21ம் தேதிக்குள் சுய குறிப்புடன் 'இயக்குனர், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், 4வது குறுக்குத் தெரு, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-13'

அல்லது

'முதல்வர், லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி, கிடாரிபட்டி, அழகர்கோயில், மதுரை 625 301' என்ற விலாசத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Wednesday, September 5, 2007

கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம்

பரங்கிப்பேட்டையில் கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம்

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செயின்ட் ஆல்பன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம் ஒன்றினை கடந்த மாதம் பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடத்தினர்.

இதில திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் புவனகிரி தொகுதி மக்கள் பிரதிநிதி செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு உரையாற்றினார் .

செய்தி : www.parangipettai.com

Tuesday, July 17, 2007

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள் மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள்
மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர், ஜூலை 17:

கடலூர் மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் 15 தினங்கள், குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 2003 முதல் 2006 வரை ஆண்டுதோறும் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு தலா ஒருவர் இறக்க நேரிட்டது. இதனைத் தடுக்க 1 முதல் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 8,16,944 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி முகாம்கள் 23-ம் தேதி தொடங்கி 15 தினங்களுக்கு நடைபெறும்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா தலைமையில் பணியாளர்களைக் கொண்ட 10 முதல் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபடும். நாளொன்றுக்கு 300 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் வராது. லேசான ஜுரம், தலைவலி, வீக்கம் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவக்குழு உடனே சிகிச்சை அளிக்கும்.

கடுமையான ஜுரம், மஞ்சள் காமாலை நோய் கண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு, பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

Monday, July 2, 2007

சட்ட விழிப்புணர்வு முகாம்

பரங்கிப்பேட்டை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்


பரங்கிப்பேட்டை அடுத்த தெற்கு சின்னூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் சட்ட பணிக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் பிருந்தா தலைமை தாங்கினார். கிராம தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், வக்கீல் சங்க தலைவர் ஜெயச்சந்திரன், வக்கீல்கள் வீரசிங்கம், பக்கிரிசாமி, சகஜானந்தம், சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

முகாமில் பொதுமக்கள் சார்பில் 20 மனுக்கள் கொடுக்கப்பட்டன. நிர்வாக உதவியாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.