கடலோர சுற்றுப்புற சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் என்.எஸ்.எஸ்., சார்பில் கடலோர சுற்றுப்புற சூழ்நிலைப் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கட்ரங்கன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் 25 நலப்பணித்திட்ட அலுவலர்களும், 250க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வ தொண்டர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 160 கி.மீ தூரம் துப்புரவு பணி செய்தனர்.
ஊர்வலம் பரங்கிப்பேட்டை, சாமியார் பேட்டை, குமாரப்பேட்டை, தேவனாம்பட்டினம், புதுச்சேரி வரை பயணித்தது. கடற்கரையில் சுத்தம் செய்தனர்.
சாமியார்பேட்டையில் காசா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பால் லூதர் சார்பாக சுமார் 200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. அதை தன்னார்வ தொண்டர்களைக் கொண்டு கடற்கரை ஓரத்தில் நட்டனர்.
இதனையடுத்து கடலூர் தேவனாம் பட்டினம் பகுதியில் எஸ்.பி., பிரதீப்குமார் கலந்து கொண்டு கடற்கரை துப்புரவு பற்றிய பெயர்ப் பலகையை நாட்டினார்.
புதுச்சேரியிலும் ஊர்வலம் நடந்தது.
0 comments:
Post a Comment