]]
Showing posts with label டிப்ளமோ. Show all posts
Showing posts with label டிப்ளமோ. Show all posts

Friday, August 31, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 11

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.Ilayangudi, Sivaganga District
E-mail:
abideen245400@yahoo.comPh: 14564-245400/265252
---------------------------------------------------------------------------------------

எடிட்டிங், ஆடியோகிராபி படிக்கலாம்

புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைப்படம் மற்றும் டெலிவிஷன் துறையில் டைரக்ஷன் சினிமாட்டோகிராஃபி, எடிட்டிங் ஆடியோகிராஃபி ஆகிய பாடப்பிரிவுகளில் 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம்.

பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

டெலிவிஷன் துறையில் டைரக்ஷன், வீடியோகிராஃபி, எலெக்ட்ரானிக் சினிமாட்டோகிராஃபி, வீடியோ எடிட்டிங் ஆடியோகிராஃபி அண்ட் டிவி என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.

விபரங்களுக்கு :-

Registrar,
Film and Television Institute of India,
Law College Road,
Pune – 411004.
E-Mail : filmnist@vsnl.com,ftipune@vsnl.com
Website :
www.ftindia.org,www.ftiindia.com

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

Wednesday, August 29, 2007

ஜிப்மரில் பட்டய படிப்பு அறிமுகம்

ஜிப்மரில் பட்டயப் படிப்பு அறிமுகம்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், மைசூர் நிறுவனமும் சேர்ந்து புதிய டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆர்.சி.ஐ., அனுமதி பெற்ற இந்த டிப்ளமோ படிப்பை மத்திய சுகாதாரத்துறை இயக்குனரகம் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கிளைகள் எம்.ஏ.எம்.சி., (டில்லி), மும்பை, இம்பால் ஆகிய மையங்களில் துவக்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜிப்மரில் மத்திய சுகாதாரத் துறை இயக்குனர் பேராசிரியர் சுப்பாராவ் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த டிப்ளமோ மாணவர்களுக்கு இ. மோடு இணைய தளம் மூலம் மைசூரில் இருந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது ஜிப்மரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பட்டயப் படிப்பாகும். இந்த தொழில் நுட்பம் மூலமாக மாணவர்கள் புதுச்சேரியிலிருந்து மைசூருக்கு, படிப்பு பற்றிய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பிற்கு தலைமை வகிப்பவர் பேராசிரியர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை பிரிவு. இந்த பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவில் மிக குறைந்தவர்கள். டிப்ளமா பயிற்சி பெற்றவர்கள் காது கேளாதவர்களுக்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.

இந்தியாவில் வரும் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் காது கேளாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால் இந்தியா முழுவதும் நேரடி பயிற்சியாளர்கள் அதிகமாக இருக்க வேண்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஏ.ஐ.ஐ. எஸ்.ஹெச்., நிறுவனமும் மற்றும் மேற்கூறப்பட்ட மற்ற நிறுவனங்களும் இணைய தளம் மூலம் இந்த பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.

Thursday, August 23, 2007

நர்சிங் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பம்

`டிப்ளமோ' முடித்தவர்கள் நர்சிங் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பம் இன்று முதல் பெறலாம்

நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்பில் சேர இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசம்.

சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tnhealth.org) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்தும் விணëணப்பமாக பயன்படுத்தலாம்.


அவ்வாறு விண்ணப்பிக்கும்போது `செக்ரட்டரி, செலக்ஷன் கமிட்டி, சென்னை-10' என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் டிமாண்ட் டிராப்ட் ஏதும் இணைக்கத் தேவையில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவ தேர்வுக்குழு செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.


மேற்கண்ட தகவலை மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் கே.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.