]]

Wednesday, August 29, 2007

ஜிப்மரில் பட்டய படிப்பு அறிமுகம்

ஜிப்மரில் பட்டயப் படிப்பு அறிமுகம்

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், மைசூர் நிறுவனமும் சேர்ந்து புதிய டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆர்.சி.ஐ., அனுமதி பெற்ற இந்த டிப்ளமோ படிப்பை மத்திய சுகாதாரத்துறை இயக்குனரகம் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கிளைகள் எம்.ஏ.எம்.சி., (டில்லி), மும்பை, இம்பால் ஆகிய மையங்களில் துவக்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜிப்மரில் மத்திய சுகாதாரத் துறை இயக்குனர் பேராசிரியர் சுப்பாராவ் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த டிப்ளமோ மாணவர்களுக்கு இ. மோடு இணைய தளம் மூலம் மைசூரில் இருந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது ஜிப்மரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பட்டயப் படிப்பாகும். இந்த தொழில் நுட்பம் மூலமாக மாணவர்கள் புதுச்சேரியிலிருந்து மைசூருக்கு, படிப்பு பற்றிய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பிற்கு தலைமை வகிப்பவர் பேராசிரியர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை பிரிவு. இந்த பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவில் மிக குறைந்தவர்கள். டிப்ளமா பயிற்சி பெற்றவர்கள் காது கேளாதவர்களுக்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.

இந்தியாவில் வரும் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் காது கேளாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனால் இந்தியா முழுவதும் நேரடி பயிற்சியாளர்கள் அதிகமாக இருக்க வேண்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஏ.ஐ.ஐ. எஸ்.ஹெச்., நிறுவனமும் மற்றும் மேற்கூறப்பட்ட மற்ற நிறுவனங்களும் இணைய தளம் மூலம் இந்த பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.

0 comments: