பல்கலை., தொலைக்கல்வி தேர்வுகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைக்கல்வி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை பட்டம், திறந்தவெளி, சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு டிசம்பர் மாதம் செமஸ்டர் அல்லாத தேர்வுகள் நடக்க இருக்கின்றன.
இவற்றுக்கான விண்ணப்பங்களை பல்கலை.,யில் சமர்ப்பிக்க வேண்டிய தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தேதிகள் வருமாறு:
அபராதம் இல்லாமல் 24.9.2007,
ரூ.100 அபராத தொகையுடன் 10.10.2007,
ரூ.200 அபராத தொகையுடன் 18.10.2007
தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தனித்தேர்வர்கள், தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15க்கான ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையை இணைத்து, கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஏப். 2000-03 மற்றும் அதற்கு முன்னர் தொலைக்கல்வியில் பி.ஏ.,/பி.எஸ்சி., பகுதி 2 ஆங்கிலம், பி.ஏ., பகுதி 3ல் முக்கிய பாடங்களாக ஆங்கிலம், அரசியல் விஞ்ஞானம், சமூக அறிவியல், பி.காம்., ஆகிய பாடத் திட்டங்கள் டிச.2007 தேர்வுகளுடன் முடிகின்றன.
இந்த பாடத்திட்டங்களில் படித்தவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி டிச.2007 தேர்வுகளுக்கு தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இத்தகவலை கூடுதல் தேர்வாணையர் திருமலை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment