]]

Friday, September 7, 2007

ஆங்கில திறன் பயிற்சிக்கு மையங்கள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆங்கில திறன் பயிற்சிக்கு மையங்கள்

தமிழகத்தில் உள்ள 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

இங்கு பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் வகையில் மொழித் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இம்மையங்களில் மாணவர்கள் கணிப்பொறி மற்றும் மொழித் திறன் மென்பொருள் மூலமாக தங்களது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

மேலும் ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்காணித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார். இதன் மூலம் 15 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆங்கில மொழித் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

2007-08ம் ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க ரூ. 35 கோடி செலவில் 106 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் சாலை பாதுகாப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

30 பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிரந்தர ஓட்டுனர் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சியளிக்கப்படுகிறது.

இத்தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.

0 comments: