தனித் தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு
தனித்தேர்வு எழுத நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்காமல் விட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது நடைபெற உள்ள மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகளை தனித் தேர்வராக எழுத நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விண்ணபிக்காமல் விட்டவர்களுக்கு தற்போது மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வு எழுத விரும்புகிறவர்கள் தேர்வு கட்டணமாக 500 ரூபாயும், பாடம் ஒன்றுக்கு 35 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக மெட்ரிக்., மாணவர்கள் 100 ரூபாயும், ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள் 50 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி., எடுத்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் சென்னை-6 என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் சேர்த்து 10ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுபவர்கள் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
0 comments:
Post a Comment