]]

Friday, September 7, 2007

சமூக நல வாரிய கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி

சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கருக்கொலை' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கிறது.

தமிழ்நாடு சமூக நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெண்கள் சமத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் 'பெண் கருக்கொலை' தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

கருத்தரங்கிற்கான கட்டுரைப் போட்டி இங்கு நடக்க உள்ளது. 'பெண் கருக்கொலை' என்ற பெயரில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இதற்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

கட்டுரைகள் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கட்டுரைகள் வரும் 14ம் தேதிக்குள் தலைவர், தமிழ்நாடு சமூக நல வாரியம், 21 அப்துல்ரசாக் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: