கடிதம் எழுதும் போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
முந்தைய தலைமுறையினரிடம் கடிதம் எழுதும் பழக்கம் பரவலாக காணப்பட்டதுடன், நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன.
ஆனால், இணைய தளம் மற்றும் மொபைல் போன்களின் வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
எனவே, இந்திய அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
இளநிலை (ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ஐந்து தலைப்புகளும்,
முதுநிலை (ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ஐந்து தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தலைப்புகளில் மாணவர்கள் கடிதம் எழுதி அஞ்சல் துறைக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் 'இன்லேண்ட் லெட்டரில்' ஆங்கிலம் அல்லது தமிழில் கடிதங்களை எழுதி, 'இயக்குனர் (அஞ்சல் வணிகம்), முதல்தளம், கிரீம்ஸ் சாலை அஞ்சலகம், சென்னை 600 006' என்ற முகவரிக்கு இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்புனர் முகவரி பகுதியில், மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
ஒரு மாணவர்கள் எத்தனை தலைப்புகளில் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.
ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்தனி கடிதத்தில் எழுத வேண்டும். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு எட்டு சைக்கிள்கள், நான்கு கீபோர்டு (இசைக்கருவி) மற்றும் நூற்றுக்கணக்கான ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு www.tamilnadupost.nic.in என்ற இணைய தளத்திலோ அல்லது 93828 14253, 93834 72266, 94444 86595 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment