]]

Friday, September 7, 2007

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிக்கும் தொழில் தொடங்க, கடலூர் அரிமா சங்கம் பயிற்சி அளிக்கிறது.

இது குறித்து அரிமா சங்கத் தலைவர் டாக்டர் ஏ. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் மூலம், கடலூர் அரிமா சங்கம் இந்த சிறப்பு பயிற்சியை அளிக்கிறது.

மூலிகைகளைக் கொண்டு கூந்தல் தைலம், முகப்பொலிவுப் பொடி, மூலிகை ஷாம்பு, பற்பொடி, உடல் பருமனைக் குறைக்கும் மூலிகை சூரணம், காஸ்மெட்டிக் எண்ணெய், வலி நிவாரணிகள் தயாரித்தல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருள்களைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

சிறுதொழில் தொடங்க நினைப்போருக்கு இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

பயிற்சிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இவர்கள் சிறுதொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் துணைபுரியும்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 350.

10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.

பெயர்களை பதிவு செய்து கொள்ள, 7-ம் தேதிக்குள் கடலூர் மஞ்சக்குப்பம் அரிமா டாக்டர் ஏ. ரவியை அணுகலாம். செல்ஃபோன் எண்: 93676- 22255.

0 comments: