]]
Showing posts with label அரிமா சங்கம். Show all posts
Showing posts with label அரிமா சங்கம். Show all posts

Friday, September 7, 2007

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிப்பு பயிற்சி

மூலிகைப் பொருள் தயாரிக்கும் தொழில் தொடங்க, கடலூர் அரிமா சங்கம் பயிற்சி அளிக்கிறது.

இது குறித்து அரிமா சங்கத் தலைவர் டாக்டர் ஏ. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் மூலம், கடலூர் அரிமா சங்கம் இந்த சிறப்பு பயிற்சியை அளிக்கிறது.

மூலிகைகளைக் கொண்டு கூந்தல் தைலம், முகப்பொலிவுப் பொடி, மூலிகை ஷாம்பு, பற்பொடி, உடல் பருமனைக் குறைக்கும் மூலிகை சூரணம், காஸ்மெட்டிக் எண்ணெய், வலி நிவாரணிகள் தயாரித்தல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருள்களைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

சிறுதொழில் தொடங்க நினைப்போருக்கு இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

பயிற்சிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இவர்கள் சிறுதொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் துணைபுரியும்.

பயிற்சிக் கட்டணம் ரூ. 350.

10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பயிற்சி நடைபெறும்.

பெயர்களை பதிவு செய்து கொள்ள, 7-ம் தேதிக்குள் கடலூர் மஞ்சக்குப்பம் அரிமா டாக்டர் ஏ. ரவியை அணுகலாம். செல்ஃபோன் எண்: 93676- 22255.

Thursday, July 12, 2007

பரங்கிப்பேட்டையில் அரிமா சங்கம் - லயன்ஸ் கிளப் (Lions club of Portonovo) ஆரம்பம்

பரங்கிப்பேட்டையில் அரிமா சங்கம் - லயன்ஸ் கிளப் (Lions club of Portonovo) ஆரம்பம்


கடலூர் துறைமுக அரிமா சங்கம் - லயன்ஸ் கிளப் (Lions club of Cuddalore port) மற்றும் சிதம்பரம் நகர அரிமா சங்கம் - லயன்ஸ் கிளப் (Lions club of Chidambaram Cosmopolitan) இணைந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருநகரம் பரங்கிப்பேட்டையில் ''பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் - லயன்ஸ் கிளப் (Lions club of Portonovo)'' அமைப்பை எற்படுத்தியுள்ளன.

அரிமா சங்க (Lions club) மாவட்ட ஆளுநர் திரு. நாராயனன் மற்றும் அரிமா சங்க (Lions club) மாவட்ட தலைவர் திரு. ரத்தின சபாபதி அவர்கள் தலைமையில் புதிய சங்கம் துவக்க விழா 28-06-2007ல் பரங்கிப்பேட்டையில் நடந்தது.


கீழ்க்கண்ட திருவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படனர்.


தலைவர் (President) : G.M. கமால்

செயலாளர்(Secretary) : M. கவுஸ் ஹமீது

பொருளாளர் Treasurer : K. அரசு

துணைத் தலைவர் (Vice President) : 1) P. அருள் வாசகம்

துணைத்தலைவர் (Vice President) : 2) M. இப்ராஹிம் மரைக்காயர்

துணைத் தலைவர் (Vice President) : 3) G. செழியன்

மக்கள் தொடர்பு (P.R.O) : Z. நூருல் அமீன்

நிர்வாகத் தலைவர் (Chairperson) : ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ்

இயக்குநர்கள் (Directors) : (1) S. காந்தியன் (2) H. ஹாஜா ஃபக்ருதீன் (3) O.A.W. பாவாஜான் (4) A.K. தமீமுல் அன்சாரி

அரிமா கட்டுபாட்டுத் துறை (Lion Tamer) : U. ஹபீபுர்ரஹ்மான்

நன்றி : www.parangipettai.com