S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி,
E-mail: abideen245400@yahoo.com
Ph: (04564) 245400 / 265252
-------------------------------------------------------------------------------------------------
நீங்கள் கிராம மேம்பாட்டு ஆர்வலரா?
இதோ நவீன படிப்பு
கிராமப்புற பிண்னனி உள்ளவர்கள் ஆர்வத்தோடு ஈடுபட ஏற்ற துறை இது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் மேம்பாடு கிராம முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது.
அதன் காரணமாக கிராமங்களை முன்னேற்றுவதற்கு அரசு பெரும் தொகைகளை முதலீடு செய்கிறது.
இந்நிலையில் நம்முடைய கிராமங்களை தயாராக்கி அதிலே வேலைவாய்ப்பை பெறுவதை அனுகூலமாக்கிக்க கொள்ளலாம்.
எதிர் காலத்தில் கிராமங்களில் பயிற்சி பெற்ற நிர்வாகிகளின் தேவை ஆண்டு ஒன்றுக்கு பத்து ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தேவை எப்படி இருக்கும்?
கிராமப்புற மேம்பாட்டில் பயிற்சி பெற்றவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
கிராமப்புறங்களில் பல தன்னார்வத் தொண்டு நிறுவணங்கள் உள்ளன.
இவைகளுக்கு வேலை செய்ய பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகின்றனர்.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், அரசின் உதவி பெறும் பல அமைப்புகளும் அதிகரித்து வருகின்றன. இவைகளில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
கிராமப்புறங்களில் மட்டுமே நடத்தக்கூடிய பல தொழில்கள் உள்ளன. இம்மாதிரியான இடங்களில் முயற்சிக்கலாம்.
தாராளமயமாக்கலுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு நகர்புறம் தவிர கிராமங்களிலும் காலூன்ற முயன்று வருகின்றன.
கிராமப்புற நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன படிக்கலாம்?
வேளாண் தொழிலில் சான்றிதழ் படிப்புகளும் வைத்துள்ளார்கள்.
இதில் பழங்கள், காய்கறிகள் பக்குவம் செய்வது பற்றியும், கோழிப்பண்ணை, பால் பண்ணை பொன்றவற்றை அமைக்கவும் பயிற்சி தருகிறார்கள்.
இது தவிர நறுமணப் பொருள்கள், எண்ணை வித்துக்கள், உணவு தாணியங்க்ள பற்றிய பயிற்சியும் தருகிறார்கள்.
கிராம நோக்கில் உள்ள பட்டப்படிப்பை பல பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன.
கிராம நிர்வாக நோக்கில் பல பட்டப்படிப்புகள் உள்ளன.
இப்படிப்பில் கிராம முன்னேற்றம் பற்றியும் கிராமியத் தொழில்கள் மற்றும் வளர்ச்சிகள் பற்றியும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தப் பட்டப்படிப்பை பல்வேறு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன.
பட்டயப்படிப்பு
பட்டப்படிப்பு முடித்தவுடன் படிக்க வேண்டிய பட்டயப்படிப்பு இது.
இது கிராம மேளாண்மை மற்றும் நிர்வாகம் பற்றியது.
இது முதநிலைப் பட்டத்திற்கு நிகரானது.
இப்படிப்பில் 50 சதவீதம் இதற்கான மதிப்பெண் தகுதி.
புனேயில் யஷ்வந்த் ராவ்சவான் ஆஷடா என்ற அமைப்பு கிராம சம்மந்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட படிப்புகளை நடத்துகிறது.
கிராம மேலாண்மையின் பல்வேறு அங்கங்களிலும் நடைமுறைக்கேற்ப பாடங்களை நடத்துகிறார்கள்.
கிராம வங்கியியல், பொருளாதாரம், கிராம முன்னேற்றம் போன்ற துறைகளிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.
இது போன்ற பயிற்சிகள் தேவை அடிப்படையில் நன்கு திட்டமிட்டு நடத்தப்படுவதால் பயிற்சியை முடித்தவுடன் வேலை பெறுதல் என்பது எளிதான ஒன்றாகிவிடுகின்றது.
பயிற்சி நடத்தும் நிறுவணங்களில் சில :-
Gandhigram Rural Institute, Deemed University,
Gandhigram , Dindugal District, Tamilnadu.
Agri Business Management,
Govind Ballabh University of Agriculture and Technology,
Pantanagar.
அறிவியல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல்களை அளிக்கும் அமைப்பு இது.
மாணவர்களானாலும் ஆசிரியர்களானாலும் இதில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.
All India Science Teachers Association,
Bharatiya Vidya Bhavan,
Kasturba Gandhi Marg,
New Delhi- 1.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment