சவுதி மருத்துவமனைகளில் பணியாற்ற இந்திய முஸ்லிம் டாக்டர்கள் தேவை
சவுதி அரேபியாவில் புனித ஹஜ் காலத்தில் ஒரு மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய முஸ்லிம் பிரிவை சேர்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில், 2007ம் ஆண்டு புனித ஹஜ் காலத்தில் ஒரு மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய முஸ்லிம் பிரிவை சேர்ந்த
சிறப்பு நிலை மருத்துவர்கள்,
தீவிர கண்காணிப்பு பிரிவு,
அவசர சிகிச்சைப் பிரிவு,
இருதய மருத்துவர்கள்,
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள்,
பி.எஸ்சி., பயின்று தீவிர கண்காணிப்பு பிரிவில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்ற பெண் செவிலியர்கள்
மற்றும் ஐந்தாண்டு அனுபவம் பெற்ற செவிலியர் மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
மேற்படி பணிக்கு தகுதி பெற்ற முஸ்லிம் மருத்துவர்கள் மற்றும் பெண் செவிலியர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணி தொடர்பான விவரங்களை குறிப்பிட்டு, கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன்
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,
தமிழக வீட்டு வசதி வணிக வளாகம், முதல் தளம்,
எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
அடையாறு,
சென்னை - 600020
என்ற முகவரிக்கு வரும் ஐந்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment