]]

Thursday, September 20, 2007

சொட்டு நீர் பாசன திட்டம் விரைவில் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் ரூ. 95 லட்சம் செலவில் சொட்டு நீர் பாசன திட்டம் விரைவில் தொடக்கம்


கடலூர் மாவட்டத்தில் ரூ. 95 லட்சம் செலவில் 750 ஹெக்டேரில் சொட்டு நீர் பாசன திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மத்திய சொட்டு நீர் பாசனத்துறையின் கீழ் மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்டம் 2007-2008ம் நிதி ஆண்டில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் மா, நெல்லி, வாழை, கொய்யா, முந்திரி, எலுமிச்சை, மற்றும் தென்னை தவிர மற்ற மர வகைகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து தர அரசு ரூ. 95 லட்சத்து 63 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து சுமார் 750 ஹெக்டேர் நிலப்பரப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

திட்டத்தின்படி மாமரம் 10-க்கு 10 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்ய ஹெக்டேர் 1-க்கு ரூ.9 ஆயிரம் மானியமும், முந்திரி 8-க்கு 8 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்ய ஹெக்டேர் 1-க்கு ரூ. 9 ஆயிரத்து 950 மானியம் வழங்கப்படுகிறது.

இதேபோன்று நெல்லி, கொய்யா, எலுமிச்சை ஆகியவற்றிற்கு 6-க்கு 6 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேர் 1-க்கு ரூ. 15 ஆயிரத்து 100 மானியமும், மாதுளை 3-க்கு 3 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரத்து 800 மானியமும், வாழை மரத்துக்கு 1.5-க்கு 1.5 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.27 ஆயிரத்து 500 மானியமும் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்கள் (வேளாண்மை பொறியியல்) கடலூர் - 9444744473, சிதம்பரம் - 9941475935, விருத்தாசலம் 9942159981 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

இந்த தகவலை கடலூர் வேளாண்மை செயற்பொறியாளர் லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

0 comments: