திருமண நிதி உதவி திட்டங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு அறிவிப்பு
சமூக நலத்துறையின் திருமண உதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
45 நாட்களுக்கு முன்...
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதைப் பெற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
வயதுவரம்பு 18-ல் இருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.
10-ம் வகுப்புக்குள் படித்திருக்க வேண்டும்.
திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தல் வேண்டும்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
பெண்ணின் வயது 18-ல் இருந்து 30-க்குள்ளாக இருக்கவேண்டும்.
தாய், தந்தையற்ற ஆதரவற்றவராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.
திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
6 மாதம் பிறகு...
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு ஏழை விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், ரூ.10 ஆயிரம் நிதி உதவி பெறலாம்.
இதற்கு வருமான வரம்பு ஏதுமில்லை. பெண்ணின் வயது 20 முதல் 35-க்குள் இருத்தல் வேண்டும்.
திருமணம் முடிந்து 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment