]]

Monday, September 24, 2007

புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

தேர்தலைப் புறக்கணிக்க த.மு.மு.க., முடிவு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் வரும் லோக்சபா தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக த.மு.மு.க., அறிவித்துள்ளது.

காரைக்கால் த.மு.மு.க., மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. லியாகத் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம், பொருளாளர் ஷாஜகான், தலைவர் ஷேக் அலாவுதீன், துணை செயலாளர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 6.9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி 18 ஆண்டுகள் ஆகிறது.

தீர்மானத்தைச் செயல்படுத்தக் கோரி புதுச்சேரி மற்றும் டில்லியில் பேரணி நடத்தியும் நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: