முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு
ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்
ஆந்திராவில் தொழிற்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆந்திரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர அரசு கடந்த ஜூலை 6ம் தேதி பிறப்பித்துள்ள முஸ்லிம்கள் இடஒதுக்கீடு அவசரச் சட்டத்தை தடை செய்யக்கோரி, முரளிதர் ராவ் மற்றும் சிரிதேஜா என்பவர்கள் சார்பில் ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இம்மனு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அருண் ஜெட்லி, 'செப்., 30ம் தேதி மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவக்கப்பட இருப்பதால், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்ட சுப்ரீம் கோர்ட், 'இந்த இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பிரிவினருக்கு சேர்க்கப்படவில்லையா?' என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பெஞ்ச், வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
0 comments:
Post a Comment