செவித்திறன் குறைந்தவர்களுக்கு பிரத்யேக பட்டப்படிப்பு துவக்கம்
பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள செவித்திறன் குறைந்த மாணவ, மாணவியருக்கு தேவையான கருவிகளை சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.
இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு:
இந்தியாவில், முதல் முறையாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைந்தோர் பயன்பெறும் வகையில் பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் 28 செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவிகள் பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதலாண்டு சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்த 28 பேருக்கும் கல்லூரி அனுமதி அட்டைகளை சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை நேற்று வழங்கினார்.
செவித்திறன் குறையுடைய இந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக காதொலிக் கருவிகளையும், சூரிய ஒளியால் செரியூட்டக்கூடிய பேட்டரிகளையும் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறைச் செயலர் பழனியப்பன், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் ஜெயக்குடி, மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment