]]

Friday, September 28, 2007

கடலூர் மாவட்டத்தில் இறுதி துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இறுதி துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளுக்குண்டான இறுதி துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், குடி பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக 44 ஆயிரத்து 942 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்து 36 ஆயிரத்து 238 தகுதியானவர்களின் மனுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இறுதி துணை வாக்காளர் பட்டியல் அனைத்து ஆர்.டி.ஓ., தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 14ம் தேதி முதலும்,

கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்குடி ஆகிய தொகுதிகளில் 24ம் தேதி முதலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நெல்லிக்குப்பம் தொகுதியில் 72 ஆயிரத்து 57 ஆண் வாக்காளர், 70 ஆயிரத்து 887 பெண் வாக்களர்கள் என மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 944 பேரும்,

கடலூர் தொகுதியில் 82 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்கள், 83 ஆயிரத்து 66 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 65 ஆயிரத்து 274 பேர் உள்ளனர்.

பண்ருட்டி தொகுதியில் 78 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்கள், 76 ஆயிரத்து 445 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 55 ஆயிரத்து 280 பேரும்,

குறிஞ்சிப்பாடியில் 72 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்கள், 70 ஆயிரத்து 288 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 42 ஆயிரத்து 550 பேரும் உள்ளனர்.

புவனகிரியில் 75 ஆயிரத்து 53 ஆண் வாக்காளர்கள், 73 ஆயிரத்து 43 பெண் வாக்காளர்கள் என ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 96 பேரும்,

காட்டுமன்னார்குடியில் 69 ஆயிரத்து 651 ஆண் வாக்காளர்கள், 66 ஆயிரத்து 489 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 36 ஆயிரத்து 140 பேரும் உள்ளனர்.

சிதம்பரத்தில் 65 ஆயிரத்து 868 ஆண் வாக்காளர்கள், 64 ஆயிரத்து 916 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 30 ஆயிரத்து 784 பேரும்,

விருத்தாசலத்தில் 88 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்கள், 86 ஆயிரத்து 541 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 74 ஆயிரத்து 763 பேரும் உள்ளனர்.

மங்களூரில் 88 ஆயிரத்து 623 ஆண் வாக்காளர்கள், 89 ஆயிரத்து 941 பெண் வாக்காளர்கள் என 1 லட்சத்து 78 ஆயிரத்து 564 பேரும் உள்ளனர்.

ஒன்பது தொகுதிகளிலும் 6 லட்சத்து 92 ஆயிரத்து 769 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 81 ஆயிரத்து 626 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 74 ஆயிரத்து 395 வாக்காளர்கள் உள்ளனர்.

0 comments: