]]

Friday, September 28, 2007

மெட்ரிகுலேசன் வினா புத்தகங்கள் 10-ந்தேதி கிடைக்கும்

மெட்ரிகுலேசன் வினா புத்தகங்கள் 10-ந்தேதி கிடைக்கும்

கல்வித்துறை அதிகாரி தகவல்


மெட்ரிகுலேசன் 10-வகுப்பு வினாபுத்தகங்கள் அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் கிடைக்கும் என்று அதிகாரி தெரிவித்தார்.

வினாப்புத்தகம்

சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ.வளாகத்தில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது.

இந்த கழகம் சார்பில் மாணவர்கள் நலன் கருதி பல வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன், பிளஸ்-2 ஆகிய தேர்வுகளில் மாணவர்கள் அதிக மார்க்கு பெறுவதற்கு வசதியாக அரசு பொதுதேர்வில் கேட்க வாய்ப்பு உள்ள அனைத்து கேள்விகள் அடங்கிய புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்துவருகிறது.

அத்துடன் ஏற்கனவே பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களும் அந்த புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.


ஆண்டுதோறும் இந்த புத்தகங்களை மாணவ-மாணவிகள் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள்.

இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு வருமானம் வருகிறது. மாணவர்களுக்கு சேவை செய்ததாகவும் உள்ளது.

ஆசிரியர்கள் பெரும்பாலும் பாடங்கள் நடத்தி முடித்து அவற்றை ரிவிசன் நடத்துவது ஜனவரி மாதத்திற்கு பிறகுதான், அதனால் அப்போதுதான் இந்த வினாப்புத்தகங்கள் மாணவர்களுக்கு தேவைப்படும்.

10-ந்தேதி கிடைக்கும்

மெட்ரிகுலேசன் வினாக்கள் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் அந்த புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

தற்போது எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கில மற்றும் தமிழ் வழியில் உள்ள அத்தனை வினாப் புத்தகங்களும் கிடைக்கிறது.

பிளஸ்-2 கணிதம், கணிதம் தீர்வு புத்தகம், வகைப்படுத்தப்பட்ட வினாக்கள் அடங்கிய கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய வினாப்புத்தகங்கள் கிடைக்கிறது.

பிளஸ்-2 வகுப்புக்கு உரிய மற்ற வினாப்புத்தகங்கள் இந்த மாதம் 20-ந்தேதிக்கு மேல் கிடைக்கும் .

0 comments: