18 நாடுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு கட்டாயம்
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், 18 நாடுகளுக்கு மட்டும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் விமான நிலையங்களில் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியிருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த விதிமுறை அமலில் இருந்தது. இதனால், எந்த பயனும் இல்லை என்றும் இந்த விதிமுறையால் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் கூறி, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விதிமுறை நீக்கப்படுவதாக, வெளிநாட்டு இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லிமென்ட்டில் அறிவித்து இருந்தார்.
இது வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு துன்புறுத்தல்களில் இருந்து விடுதலை கிடைப்பதாக அமைந்து இருந்தாலும், 18 நாடுகளில் வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் மொத்தம் 173 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியமாக இருந்தது.
இவற்றில் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும்,
மலேசியா, சிரியா, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, ஈராக், புருனே, ஏமன், சூடான், லெபனான் மற்றும் லிபியா ஆகிய 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டியது அவசியம்.
கடந்த 1983ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியேற்றச் சட்டத்தில் வேலைக்கு செல்வோருக்கு மட்டுமே குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை அவசியம் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், வேறு காரணங்களுக்காக குறைந்த நாள் வெளிநாடு செல்வோருக்கும் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெறப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு மட்டும் வேலை அல்லாமல் வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற 5.5 லட்சம் பேர் குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற்று வந்தனர்.
அவர்களும் இனி குடியேற்ற சரிபார்ப்பு முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை.
இதன் மூலம் அரசுக்கு ரூ.600 கோடி மிச்சமாகும் என்று கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment