மனித உரிமைகள் கழகம் சார்பில் சாமியார்பேட்டையில் முப்பெரும் விழா
பரங்கிப்பேட்டை வட்டார மனித உரிமைகள் கழகம் சார்பில் உலக எழுத்தறிவு தினம், தேசிய கண் தான தினம், ஆசிரியர் தினம் ஆகிய முப்பெரும் விழா சாமியார்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவில் நூலகர் உத்திராபதி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை வட்டார தலைமை அமைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மனவளக்கலை ஆசான் அம்பலவாணன், காட்டுமன்னார்குடி வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நந்தனார் பள்ளி ஆசிரியர் பழனிவேல், பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பணியாளர் துரை வடிவேலு, சாமியார்பேட்டை ஆசிரியை நதியா, பிரகாஷ் மற்றும் சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி, சண்முகம், செந்தமிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தறிவு தினத்தையொட்டி பு.முட்லூர் பள்ளியில் காமராஜர் பற்றிய கட்டுரை போட்டியில் முதல் பரிசும், உலக மக்கள் தொகை பற்றிய கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்ற தையல் தொழிலாளியின் மகள் துர்காவை பாராட்டி மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனித உரிமைகள் பற்றிய குறிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சையப்பன், ஆசிரியை நதியா செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment