]]

Friday, June 15, 2007

அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் அடுத்த வாரம் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது1,020 இடங்களுக்கு 37 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் அடுத்த வாரம் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது1,020 இடங்களுக்கு 37 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜுன் 16-
அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் அடுத்த வாரம் சரிபார்க்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 67 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள 1020 விரிவுரையாளர் பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு இல்லாமல் புதிய முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணி இடங்களுக்கு 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். படிப்பு அடிப்படை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தற்போது அதுபோன்று தேர்வு எதுவும் கிடையாது. அதற்குப் பதிலாக புதிய முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதன்படி, கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்ப குறிப்பிட்ட மார்க், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ஆண்டுக்கு தகëகவாறு குறிப்பிட்ட மதிப்பெண், ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அதற்கு ஒரு மதிப்பெண், பணி அனுபவம் இருந்தால் அதற்கு குறிப்பிட்ட மார்க், பி.எச்டி. (ஆராய்ச்சிப் படிப்பு) முடித்திருந்தால் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் என்று வெவ்வேறு தகுதிகளுக்கு மதிப்பெண் போடப்படும். நேர்முகத் தேர்வுக்கும் தனி மதிப்பெண் வழங்கப்படும். அந்த மொத்த மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
விரிவுரையாளர் பணிக்கு விணëணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். இது குறித்து அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் இன்று (சனிக்கிழமை) செனëனையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சான்றிதழ்களை சரிபார்த்து மதிப்பெண் வழங்கும் முறை குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி அடுத்த வாரம் ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் நடைபெற உள்ளது. அதன் பின்னர் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் வெவ்வேறு போர்டுகள் மூலம் நேர்முகத்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜுலை மாதம் முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு அங்கேயே பணிநியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விரிவுரையாளர்கள் மாநில உயர்கல்வி மன்றம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கல்லூரிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கல்லூரி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: